மருதமுனை ஹரீஷாவின் “சொட்டும் மிச்சம் வைக்காமல்” கவிதை நூல் வெளியீட்டு விழா.

பி.எம்.எம்.ஏ.காதார்-
ருதமுனை ஹரீஷா எழுதிய “சொட்டும் மிச்சம் வைக்காமல்” கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(07-04-2019)மருதமுனை மருதூர்க்கனி பொது நூலக கேட்போர் கூடத்தில் எழுத்தாளர் மர்ஹ_ம் மருதூர்வாணர் நினைவரங்கில் நடைபெற்றது.
இலங்கை வானொலி பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கலந்து கொண்டார் அவரிடமிருந்து நூலின் முதல் பிரதியை சிரேஷ்ட சட்டத்தரணியும்,பதில் நீதிபதியுமான ஏ.எம்.பதுறுதீனின் சார்பில் கலந்து கொண்ட அவரது ஜூனியர் சட்டத்தரணி ராஸிம் ஹமீட் பெற்றுக்கொண்டார்.
விஷேட மற்றும் சிறப்புப் பிரதிகளை கல்முனை ஏ.எம்.எம்.இன்ஜினியரிங் கன்ஸ்ரக்ஷன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.முஸம்மில்,மருதமுனை எவபெஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பேராசிரியர்களான செ.யோகராசா,றமீஸ் அப்துல்லா ஆகியோரும்,விஷேட அதிதியாக ,எழுத்தாளர் உமா வரதராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆசிரியரும்,ஊடகவியலாளரும்,விமர்சகருமான ஜெஸ்மி எம்.மூஸா நூல் நயவுரை நிகழ்த்தினார்.நூலாசிரியரின் கணவர் அப்துல் ஜப்பார் சமீம் வாவேற்புரை நிகழ்த்தனார்;.ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம் நூலை வெளியீடு செய்தது.
இந்த விழாவில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே;.எம்.ஏ.றஸாக்(ஜவாத்),எழுத்தாளர் வபா பாறூக், முத்த எழுத்தாளர் மு.சடாட் சரன்.ஓய்வு பெற்ற காதி நீதிபதி என்.எம்.இஸ்மாயில் உள்ளீட்ட பெரும் அளவிலான தமிழ் முஸ்லிம் கவிஞர்களும்,எழுத்தாளர்களும்,பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -