அண்மையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் பல பகுதிகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு முப்படையினர் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி சோதனைச் சாவடிகளில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் வீதிகளில் பயணிக்கின்ற சந்தேகத்திற்கிடமான பஸ்,வேன்,கார்,லொறி,முச்சக்கரவண்டிகள்,மோட்டார் சைக்கிள் உட்பட ஏனைய மோட்டார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு முப்படையினரால் பரிசோதிக்கப்படுவதுடன்,வீதியில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்லுகின்ற பொது மக்களின் ஆள் அடையாளங்கள் பரிசோதிக்கப்படுவதுடன்,அவர்கள் கொண்டு செல்லுகின்ற பைகள்,பொருட்கள்,பொதிகள் என்பனவும் விஷேடமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் சிறிய அசம்பாவிதங்கள் கூட இடம்பெறாமல் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சோதனைச் சாவடிகளில் இடம்பெறுகின்ற குறித்த சோதனை நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை,மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ்,இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.