இன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில், வெளிநாட்டவர் 9பேர் வரை, உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்த அனர்த்தங்களை தொடர்ந்து, தனியார் பஸ்வண்டிகளில் பொதிகள் கொண்டு செல்வதை, தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக ,தனியார் பஸ் போக்குவரத்து சங்க தலைவர் கெமுனு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரயில் சேவைகளிலும் பொதிகள் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளதாக ,,ரயில் சேவைஅதிகாரி டிலந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி அமைச்சினால் நாளை 22 மற்றும் நாளை மறுதினம் 23 வரை நாட்டின் சகல பாடசாலைகளும் மூடப்படும்,அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 207 பேர் இறந்துள்ளதாகவும் 500க்கு மேற்பட்டோர் காயமுற்றுள்ளதாகவும் அறியப்படுகிறது.
3 கத்தோலிக்க ஆலயங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால், இன்று மாலை கத்தோலிக்க ஆலயங்களில், நடைபெற இருந்த பாஸ்கு பூஜைவழிபாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு பிஷப் ஹவுஸ் தீர்மானித்துள்ளதாக அறியப்படுகிறது.