திடீர் விபத்துக்கள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீப் பிடிப்பு, பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களுக்கு அரச பாதுகாப்புத் துறையினரிடம் உடனடி பிரதிபலனைப் பெற்றுக்கொள்ள, புதிய அவசர அப் (Emergency App) ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்மூலம், உடனடி அம்பியூலன்ஸ் சேவை, தீயணைப்புச் சேவை, பொலிஸ் சேவை உட்பட அரச பாதுகாப்பின் அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.