ஆலயத்திற்குசென்று வழிபட சுதந்திரமில்லையா...?


காரைதீவு  சகா-

ந்தநாட்டில் மனஅமைதி தேடி ஆலயத்திற்குச்சென்று வழிபடக்கூட சுதந்திரமில்லையா? அப்படியானால் மனிதன் என்று வாழ்வதில் என்ன அர்த்தம்?


இவ்வாறு காரைதீவில் இன்றுஇடம்பெற்ற ஆத்மசாந்திநிகழ்வில் உரையாற்றிய இந்துமத குருவான காரைதீவு ஸ்ரீ கண்ணமைஅம்மனாலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் கேள்வியெழுப்பினார்.


கடந்த உயிர்த்தஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச்சம்பவத்தில் பலியான உறவுகளுக்கு ஆத்மசாந்தி அஞ்சலி செலுத்தும் வைபவம் இன்று(23) செவ்வாய்க்கிழமை காரைதீவு விபுலாநந்தா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.


காரைதீவு பிரதேசசபை ஏற்பாட்டில் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.


முன்னதாக மண்டபவிளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு அங்கு மரணித்த 300ஆத்மாக்களுக்கும் 30அகல்விளக்குகள் ஒளியேற்றப்பட்டன.பின்னர் அனைவரும் புஸ்பாஞ்சலி செய்தனர்.இறுதியில் 5நிமிடங்கள் மௌன ஆத்மசாந்திப்பிரார்த்தனை இடம்பெற்றது.


மதத்தலைவர்கள் ஆலயத்தலைவர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் எனப்பலதரப்பினரும் கலங்கொண்டனர்.


அங்கு இந்துமதகுருவான மகேஸ்வரக்குருக்கள் மேலும் உரையாற்றுகையில்:
அனைத்து மதங்களும் நல்லவிழுமியங்களையே சொல்கின்றன.இந்துசமயம் கூறுவதுபோல பிறமதங்களை மதிக்கவேண்டும் பிறமதஸ்தலங்களை மதிக்கவேண்டும்.இறைவன்ஒருவன்தான்.
எனினும் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற மிகக்கொடுரமான தாக்குதலால் இலங்கை மட்டுமல்ல உலகமே அதிர்ந்திருக்கின்றது.


இறைவனை சுதந்திரமாக வழிபட முடியாதா? என்று கேட்குமளவிற்கு மதசுதந்திரம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.


இனியும் இவ்வாறான துர்ச்சம்பவங்கள் நிகழாவண்ணம் அரசாங்கம் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும். மனிதர்களாகிய நாம் இறந்தவர்களின் ஆண்மஈடேற்றத்திற்காக பிரார்hத்னைசெய்யவேண்டும். காயமடைந்தவர்கள் குணமாக பிரார்த்தனை செய்யவேண்டும். இதுவன்றே நாம்செய்யக்கூடிய கைங்கரியமாகும் என்றார்.


கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்னதேரர் அருளுரையாற்றுகையில்:
பகைமையை பகைமையால் ஒருபோதும் வெல்லமுடியாது என்பது புத்தபெருமானின் உபதேசமாகும்.அன்பு கருனை சகோதரத்துவம் சாந்தி சமாதானம் என்பனவற்றையே சமயங்கள் போதிக்கின்றன.
அனைவருக்கும் மதசுதந்திரமுள்ளது. அதனைக்கேள்விக்குட்படுத்தக்கூடாது. அதற்கு யாருக்கும் உரிமையில்லை.
எனது மதம்தான் பெரியது என்று யாராவது சொல்லமுனைந்தால் அவருக்கு அவரது சமயமே தெரியாது என்று அர்த்தம்.


இந்ததாக்குதல் தொடர்பான செய்தி அரசிற்கு ஏலவே தெரிந்திருந்தும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன்? அரசியல் சுயலாபம் உள்ளதா? இதன்பின்னணியிலுள்ளவர்கள் வெளிச்சத்துக்குகொண்டுவரப்படவேண்டும்.
இனியும் இவ்வாறான கொடுராமான தாக்குதல்கள் இடம்பெறாவண்ணம் சம்பந்தப்பட்டோர் நடவடிக்கையை துரிதமாகஎடுக்கவேண்டும் என்றார்.


காரைதீவு எய்ம்ஸ் தேவாலய தலைவர் போதகர் எ. கிறிஸ்தோபர் அருளுரையாற்றுகையில்:
எந்த மரணவீட்டிற்கு செல்வது என்று தெரியாமல் அன்று வேதனையடைந்தோம்.பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புசென்று வழிபடச்சென்ற தந்தையும் மகளும் மரணித்திருந்தார்கள். அவர்தான் குண்டுதாரியை தடுத்துள்ளார். அக்கணமே வெடித்திருக்கிறது. அவர்களது ஈமக்கிரியைகளில் நேற்று பங்கேற்றேன்.


கொழும்புகொச்சிக்கடை தேவலாயத்திற்கு குண்டுவைக்கவந்தவர் அங்கிருந்த குழந்தையை பேபி என்று தலையில் செல்லமாகத்தட்டிவிட்டு உள்ளேசென்று வெடிக்கவைத்திருக்கிறார். அவருக்கும் இறுதிக்கணமும் மனிதநேயம் இருந்திருக்கிறது. என்றார்.


காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் உரையாற்றுகையில்:
இலங்கைவரலாற்றில் தேவாலயத்தில் இடம்பெற்ற மிகக்கொடுரமான மிலேச்சத்தனமான தாக்குதலாக இதனைப்பார்க்கலாம்.


இதுவிடயம் அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும் மௌனமாக இருந்தது ஏன்? இத்தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் ஏவியவர்கள் பின்னணியிலுள்ளவர்கள் கட்டாயம் வெளிச்சத்துக்கொண்டுவரப்படவேண்டும்.


ஊடகங்களைப்பர்க்கின்றபோது பெரும் அரசியல்வாதிகளின் பெயர்களும் அடிபடுகின்றன. யாராகவிருந்தாலும் இனமதபேதமின்றி அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
நல்லாட்சிஅரசு என்று வந்தபிற்பாடுதான் இந்த பாரிய போதைவஸ்துப்பிரச்சினை இன்று தேவாலயத்தாக்குதல் என்பன இடம்பெற்றிருக்கின்றன. மனிதகுலத்திற்கு விரோதமான இம்மிலேச்சத்தனமான தாக்குதலின் சூத்திரதாhரிகள் எந்த தராதரமின்றியும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.என்றார்.

ஆத்மசாந்தி நிகழ்வை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளிக்க சபைச்செயலாளர் அ.சுந்தரகுமார் நன்றியுரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -