காரைதீவு நிருபர் சகா-
மட்டக்களப்ப சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினை முன்னிறுத்தி மட்டக்களப்பு மாவட்டம் பூராக துக்க தினம் அனுஷ்ரிக்கப்பட்டு வந்தது இது இரண்டு நாட்கள் தொடரச்சியாக நடைபெற்றது. இதன்போது கடைகள் அடைக்கப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. களுவாஞ்சிகுடி பிரதேசத்திலும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வெள்ளக் கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன் ஆங்காங்கே ஆஞ்சலி செலுத்தும் முகமாக பாதாதைகளும் காட்சி படுத்தப்பட்டிருந்தது.
அதனையடுத்து (24) புதன்கிழமை கடைகள் மற்றம் பொதுச் சந்தை தனியார் நிறுவனங்கள் வழமைபோன்று இயங்கியது அத்துடன் மக்களின் நடமாட்டமும் வாகனபோக்குவரத்தும் இடம்பெற்றது களுவாஞ்சிகுடி நகரம் வழமக்கு திரும்பியது.