வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு அரசின் மாணிய உரம்


50 Kg மூடை 500 ரூபாவுக்கு உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தவிசாளரும்,
கிராமிய பொருளாதார, விவசாய, நீர்பாசன இராஜாங்க அமைச்சருமான கெளரவ அமீர் அலி அவர்கள் உர நிறுவனங்களுக்கு உத்தரவு பிறபித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் மாணிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கும் உரத்தினை, உரமோசடிக்கு உட்படுத்துவோருக்கு,
அரச சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் அமைச்சர் கூறினார்.
வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு 500 ரூபா உரத்தினை அவர்கள் காலடிக்கு கொண்டு செல்வதற்கான பிரதேச களஞ்சியசாலை வசதிகளையும் விவசாய அமைப்புக்களின் கோரிக்கைக்கு ஏற்ப செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்.

விவசாயிகளின் உரத் தேவைப் பாடுகளை இலகுவாக்கித் தந்தமைக்காக கெளரவ அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கு பல மாவட்ட விவசாய அமைப்புக்கள் நன்றிகளையும், பிராத்தனைகளையும் செய்து கொள்கின்றனர்.

எம்.எம்.ஜுனைடீன்,
பனிபாளர்,
வர்த்தக உரக் கம்பனி,
ஹுனுப்பிட்டிய,
வத்தளை.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -