இலங்கைத் திருநாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கம் கடந்த வருடம் ஒக்டோபர் 26ல் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் சீர் குழைக்கப்பட்டு 52 நாட்களின் பின்னர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, தற்போது தேசிய ஐக்கிய முன்னணி சார்பான அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது.
அரசியல் அமைப்பின் 19வது திருத்தத்தின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சர்கள் 30 க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். என்பதுடன் இதனை அதிகரிப்பது என்றால் தேசிய அரசாங்கம் அமைத்து பாராளுமன்ற அனுமதியை பெற்று அதிகரித்துக் கொள்ளலாம் என்ற நிலையில் கடந்த 3 வருடங்களில் நாட்டில் தேசிய அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும் இணைந்து ஏற்படுத்தியிருந்தது, இதன் காரணமாக பாராளுமன்ற அனுமதியுடன் 30 க்கு மேற்பட்ட அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக இரு கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெளியேறச் செய்தது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் அமையப் பெற்று அமைச்சரவை அமைச்சு பதவிகள் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டுவதற்கு உறுதுணையாக இருந்த சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
தற்போது தேசிய அரசாங்கத்தில் இருந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 30 ஆக வரையறுக்கப்பட்ட நிலையில் கடந்த காலத்தில் இருந்த அமைச்சுக்களையும் இருக்கின்ற அமைச்சர்களுக்கே பகிர்ந்தளிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு சில அமைச்சர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சுக்கள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் கடந்த தேசிய அரசாங்கத்தில் நகர திட்டமிடல்,நீர் வழங்கள் அமைச்சராக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் தேசிய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் மேலதிகமாக உயர் கல்வி அமைச்சும் சேர்த்து வழங்கப்பட்டிருந்தது.
உயர் கல்வி அமைச்சை கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் உயர் கல்வியில் பல்வேறு பணிகளை செய்ய ஆரம்பித்தார்.
வரிய மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்காக வேண்டி அன்று அமைச்சர் கௌரவ லலித் அதுலத் முதலி அவர்களால் முதல் முதலாக மகாபொல நிதித் திட்டம் என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
இன்று கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அதிகளவான பல்கலைக்கழக மாணவர்கள் நன்மை அடைவதற்காக அந்த மகாபொல நிதியினை இரு மடங்காக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கிறார். அதே போன்று உயர் தொழில் நுற்பவியல் கல்வி நிறுவனத்தினூடாக இதுவரை வழங்கப்பட்டு வந்த 1500 ருபாவை 2500 ரூபாவாக உயர்த்துவதற்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களை அதிகளவாக பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மற்றும் வட மாகாணத்திலுள்ளே யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் தேசிய தலைவனாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக,நாட்டின் பொறுப்புள்ள அமைச்சுக்களின் முழு அமைச்சராக பல்வேறுபட்ட வேளைப் பழுக்களுக்கு மத்தியிலும் தனக்கு மேலதிகமாக வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புள்ள அமைச்சின் கீழுள்ள வேளைத்திட்டங்களை மக்கள் நலன் கருதி திறம்பட செய்து முடிப்பதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
அந்த வகையில் உயர் கல்வித் துறையில் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக துறைசார் நிபுணர்களோடு அடிக்கடி சந்திப்புகளை மேற்கொள்வதோடு, உயர் கல்வி சார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வேண்டி பல்கலைக்கழக செயற்பாடுகளில் நீண்ட கால அனுபவமுள்ளவரை தனது அமைச்சின் இணைப்பு செயலாளராக நியமித்து உயர் கல்வி தொடர்பான செயற்பாடுகளையும் சிறப்பாக முன்னெடுத்து வருகிறார்.
அத்தோடு உயர் கல்வி தொடர்பாக மாணவர்களை விழிப்புணர்வூட்டுவதற்கான நடவடிக்கைகளையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரையின்படி உயர் கல்வி அமைச்சு மேற்கொள்ளவிருக்கிறது.
இதனை மாணவ சமூகம் உயர் கல்வித் துறையில் தங்களுக்கான துறைகளை தேர்வு செய்வதற்கு சிறந்த வாய்ப்பாக உபயோகித்து கொள்ள வேண்டும். உயர் கல்வியை நாட்டில் மேம்படுத்துவதற்காக சர்வதேச ரீதியாகவும் இவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களுடனான சந்திப்புகளையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மேற்கொண்டுவருவதையும் நாம் கடந்த காலங்களில் கண்கூடாக கண்டு வந்தோம்.
எனவே தன்னிடம் கடந்த காலங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ள நகர திட்டமிடல்,நீர் வழங்கள் அமைச்சுக்களூடாக பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் உயர் கல்வி அமைச்சும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட போது அதில் பல சவால்கள் இருப்பதை உணர்ந்து அவைகளை சாதுர்யாமாக காய்நகரத்தி சாணக்கியமாக சாதித்து காட்ட முனைவது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அரசியல் முதிர்ச்சியையும் தேசிய தலைவர் என்ற நாமத்தையும் பிரதிபலிக்கின்றது.