மலையகத்த்தில் மேதின நிகழ்வுகள் இரத்து உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த கோரிக்கை


எம்.கிருஸ்ணா-
நாட்டில் கடந்த 21 ஆம் திகதி எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினையடுத்து மலையகத்தில் இடம்பெறவிருந்த மேதினக்கூட்டங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அனைத்து கட்சி வட்டாரங்களில் இருந்தும் தெரிய வந்துள்ளது.
குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களுக்கு மேதினத்தன்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டின் பிரதான கட்சிகள் மற்றும் அதனது தொழிற்சங்கங்கள் உட்பட மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்களில் மேதினக்கூட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் முற்போக்குக் கூட்டணி தலவாக்கலை நகரில் செய்யவிருந்த மேதினக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அன்றையதினம் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதி தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்

இதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் மேதின நிகழழ்வு தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தப்போதிலும் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவித சூழ்நிலையினால் இரத்துசெய்யப்பட்டுள்ளதுடன் , அன்றைய தினம் உயிர்நீதத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -