யாழ்.ஆஸ்பத்திரியில் அநாமதேய கார்- சோதனையால் பரபரப்பு

பாறுக் ஷிஹான்-வீதியில் பல மணிநேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகித்து நடைபெற்ற திடீர் சோதணை நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியார் வாகன தரிப்பிடத்தில் இன்று செவ்வாக்கிழமை(23) அதிகாலை 6 மணியில் இருந்து 10.30 மணிவரைக்கும் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பல மணி நேரமாக குறித்த கார் அங்கு உரிமையாளர் வருகைதராமல் தரித்து நின்றதால் அதில் வெடி குண்டு இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டவர்கள் இது குறித்த யாழ்.பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப் படையினருடன் வந்த பொலிஸார் குறித்த காரை சோதனை செய்தனர்.
குறித்த கார் சோதணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது கார் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்த அது தன்னுடைய கார் என்பதை உறுதிப்படுத்தினார்.
இருப்பினும் கார் முழுவதையும் சோதனையிட்ட விசேட அதிரடிப் படையினர் காரில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் உரிமையாளரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -