புல்மோட்டை தள வைத்தியசாலை,பதவி பிரதேச வைத்தியசாலை போன்றவற்றிக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் வேண்டுகோளில் புதிய ஆம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன,
மேலும் திருகோணமலை ஆதார வைத்தியசாலை,மொரவெவ பிரதேச வைத்தியசாலை போன்றவற்றுக்கும் சுகாதார இராஜாங்க அமைச்சர் கெளரவ பைசல் காசீம் அவர்களால் முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் தலைமையில் பதவி ஸ்ரீ புர வைத்திய அதிகாரி,புல்மோட்டை வைத்தியசாலை ஆம்புலன்ஸ் சாரதி மற்றும் RDHS அலுவலக அதிகாரிகளின் பங்களிப்போடு வழங்கி வைக்கப்பட்டது இதன்போது முன்னாள் தவிசாளர் பாயிஸ் அவர்களும் கலந்துகொண்டார்
மேலும் மூதூர்,கிண்ணியா போன்ற தள வைத்தியசாலைக்கான Benz ரக 40 ஆம்புலன்ஸ் வண்டிகள் தற்பொழுது கொழும்பு துறைமுகத்தில் உள்ளதாகவும் வெகு விரைவில் அவற்றையும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
மேலும் கலேவல பிரதேச சபை உறுப்பினர் மௌபீத் அவர்களின் வேண்டுகோளிலும் கலேவல,மாத்திபோல,யட்டவாத போன்ற 03 வைத்தியசாலைகளுக்கான ஆம்புலன்ஸ் வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.