இனங்களுக்கிடையில் நல்லுறவும் சகவாழ்வும் வலுப்பெறட்டும்


பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்-
னங்களுக்கிடையில் நல்லுறவும் சகவாழ்வு தோன்றி இன , நல்லிணக்கம் ஏற்பட இத் தமிழ்,சிங்கள புத்தாண்டு வழி சமைத்துக் கொடுக்கட்டும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அச் செய்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
உலகமெல்லாம் வாழும் இந்துக்களும், பௌத்தர்களும் இன்று புதுவருட பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

கடந்த முப்பது வருட காலமாக இந்நாட்டில் ஏற்பட்டிருந்த கொடிய யுத்தத்தில் இப்புத்தாண்டு காலங்களில் மாத்திரம் யுத்த நிறுத்த உடன்படிக்கை பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ சம்பந்தப்பட்ட இரு தரப்புக்குமிடையில் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிவிட்டு, புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஒரே ஒரு வாரம் மாத்திரம் வழங்கப்பட்டு, இருள் சூழ்ந்திருந்த அக்காலத்தை இந்நாட்டில் வாழும் மூவின மக்களும் எளிதில் மறந்திட முடியாது!

இலங்கை தேசம் தொடக்கம் உலக வாழ் அனைத்து சிங்கள, தமிழ் புத்தாண்டை கொண்டாடுவோர்கள் அனைவரும் சௌபாக்கியம் நிறைந்த நாளாகவும் சமாதானம், ஐக்கியம் நிறைந்த நன் நாளாக இப் புத்தாண்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாட்டின் நல்லிணக்கம் சகவாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் புதியதோர் ஆண்டாக எல்லோருக்கும் வழி வகுக்க உறுதிபூண வேண்டும்.

சுதந்திரமாகவும் கடந்த கால குரோதங்களை மறந்து ஒற்றுமையுடன் வாழ வழிவகுப்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டான நாளாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கௌரவ அப்துல்லா மஹ்ரூப்( MP)
துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -