அப்பாவி உயிர்களை பலியெடுக்கும் தாக்குதல்கள் கோழைத்தனமானவை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்


ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

ப்பாவி மனித உயிர்களை இலக்குவைத்து, கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாயலங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்கள் சிலவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமானதும் கோழைத்தனமானதுமான குண்டுத் தாக்குதல்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் வன்மையாக கண்டிப்பதாக கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களை கண்டித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

இன்று இடம்பெற்ற கொடூரத் தாக்குதல்களில் பல அப்பாவி மனித உயிர்கள் பலியாகி, ஏராளமனோர் படுகாயமடைந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நாட்டில் கொடூர யுத்தம் ஓய்ந்து, சமாதானம் நிலவுகின்ற சூழ்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் நாட்டின் பொருளாதார விருத்தியையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் வெகுவாகப் பாதிக்கும் செயலாகும்.

திட்டமிட்ட இந்த தாக்குதல்களின் பின்னணியில் ஒருவிதமான ஒருங்கிணைப்புடன் கூடிய ஒத்ததன்மையை அவதானிக்க முடிகின்றது. கிறிஸ்தவ மக்கள் தங்களது முக்கிய மத நிகழ்வொன்றை அனுஷ்டிக்கின்ற இந்நாளில் இந்த துக்கரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை வருந்தத்தக்கது. இது மிகவும் பாரதூரமான ஜனநாயக விரோத, தேசத்துரோக செயலாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த வன்செயல்களை வன்மையாக கண்டிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல், தாக்குதல்களின் உள்நோக்கங்களை கண்டறிந்து, இதன் சூத்திரதாரிகளை சரிவர அடையாளம்கண்டு, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
இந்தக் கோர சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

இன நல்லிணக்கத்தையும் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் விதத்தில் செயற்படும் தீயசக்திகளின் நோக்கங்களுக்கு துணைபோகாமல், அமைதியைப் பேணி, நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்கள் அனைவரையும் வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.

--------------------------------------------------------------------------------------


Statement from the Sri Lanka Muslim Congress – 21-04-2019
The cowardly and barbaric attacks carried out on the unsuspecting innocent civilians most of whom had gathered to observe and offer prayers at churches during one of the important and holiest days in the Christian calendar are absolutely shocking for our country and people, who had made great sacrifice to bring in a period of peace and stability since the end of the armed conflict. This no doubt constitutes acts of terror.
At the very outset, the SLMC condemns these cruel and senseless violent attacks in the strongest possible terms and calls on the government to immediately use its full strength at its command to investigate, find the underlying cause of the motives, apprehend and bring to book perpetrators, and their promoters or handlers, whoever they are.
It is apparent that these dastardly attacks have been coordinated well targeting popular places of worship for Christians in order to instigate religious hatred and violence and also on tourists staying in hotels thus smacking of collateral purposes, including an attack on democracy. Hence, the need for law enforcement authorities to act fast and find the truth, stop the spread of such violent terror and ensure justice to the victims.
The SLMC stands in solidarity with all those who have been affected and the kith and kin of those who have been killed so senselessly and offer our deepest commiserations. The SLMC also urges every Sri Lankan to be mindful of the agents of disharmony and destabilization, not to fall prey to sinister designs and to remain calm. We call upon the people to cooperate with the government and the law enforcement agencies in their efforts to maintain law and order, investigate, and bring to justice authors of these terrorist acts.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -