தமிழ் மக்களை வைத்து தமிழ் அரசியல் தலைவர்கள் நாடகமாடுகின்றார்கள் – பாஸ்டர் ஜோன் லோகநாதன்.




எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுடைய வாழ்வையும், எதிர்காலத்தையும் கருத்தில் எடுக்காமல் தங்களுடைய வாழ்வுக்காகவும் தங்களுடைய சுயநலன்களுக்காகவும் தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் நாடகங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர்அலி அவர்களின் இணைப்புச் செயலாளர் பாஸ்டர் ஜோன் லோகநாதன் தெரிவித்தார்.
ஓட்டமாவடியில் நிர்மாணிக்கப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம் திறப்புவிழா நிகழ்வு அண்மையில் பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழுகின்றார்கள் அவர்களை தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளார்கள். இப்படிப்பட்ட ஒரு துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு வரப்போகின்ற காலத்தில் ஒரு நல்ல அரசியல் தலைமையை இந்த மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு தங்களுடைய உள்ளத்தில் உள்வாங்கிக் கொண்டு இந்த மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கும் ஒரு நல்ல அரசியல் தலைமைத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழியை நீங்கள் எங்களுக்கு காண்பித்துத் தரவேண்டும் என்று மேடையில் இருந்த அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களிடம் பாஸ்டர் ஜோன் லோகநாதன் வேண்டிகொண்டார்.
இந்த நாட்டிலே இருகின்ற முஸ்லிம் சமூகம் சிறப்பான அரசியல் தலைமைகளைப் பெற்றிருக்கும் நிமிர்த்தம்தான் இன்றைக்கு உங்களுடைய குடும்பங்களும், பிரதேசங்களும் சிறப்பான நன்மைகளைப் பெற்றிருக்கிறது. எனவே அப்படிப்பட்ட நல்ல அரசியல் தலைவர்களை நீங்கள் கவனித்துக் கொள்ளுகின்ற போதுதான் இந்த நாட்டில் நீங்கள் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்று சொல்வதில் நான் பெருமையடைகிறேன் என்றார்.
இந்நிகழ்வி பிரதம அதிதியாக கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாத் பதியுதீன், விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர்அலி, கப்பல் மற்றும் துறைமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -