கல்முனையில் சொட்கன் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி தோட்டா மீட்பு

பாறுக் ஷிஹான்-
ல்முனை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சொட்கன் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
இன்று(29) காலை 7.30 மணி முதல் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை குடி கடற்கரை வீதி தொடக்கம் சாய்ந்தமருது வரையான பிரதேசங்களில் இராணுவம் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மதியம் 2 மணிவரை இடம்பெற்ற மேற்படி தேடுதலில் சொட்கன் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் நான்கு தோட்டாக்கள் ஷாயிப் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கல்முனை  மாநகர சபையின் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அங்கு தேடுதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் குறித்த தோட்டாக்களை மீட்டதுடன் இரு சந்தேக நபர்களை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
தொடர்ந்து மேற்குறித்த பகுதிகளில் இடம்பெற்ற தேடுதலில் மோட்டார் சைக்கிள் இலக்க தகட்டினை போலியாக பொருத்தி சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு இளைஞர்கள் விசாரணைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -