இன்று நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்றமிலேச்சத்தனமாக தொடர்குண்டு வெடிப்;பு சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாக உள்ளுராட்சி மற்றும்மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது கண்டன அறிக்கையில்தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இக்குண்டுத் தாக்குதல்களைஏற்றுக்கொள்ள முடியாது. இத்தாக்குதல்கள் பொதுமக்கள் தங்களது மதக் கடமையை நிறைவேற்றும் வேளையில்இலக்கு வைத்து தாக்கப்பட்டமை பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து நாட்டு மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், அரசாங்கம் மக்களின் பாதுகாப்பினையும்நாட்டிலுள்ள சகல இன மக்களின் வணக்கஸ்தலங்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும்அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் குண்டுத் தாக்குதலில காயமடைந்தவர்களும் விரைவில் குணமடைய தான்பிரார்த்திப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.