மனித நேயத்துக்கு மதிப்புக் கொடுக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்ப முனைவோம்; சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் அறைகூவல்


அஸ்லம் எஸ்.மௌலானா-
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலாக மனித நேயத்துக்கு மதிப்புக் கொடுக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்ப முனைவோம் என சமூக வலுவூட்டலுக்கான பல்லின ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அமைப்பின் சார்பில் அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"இலங்கையில் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட வெடிப்புச் சம்பவங்களை எமது ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் மற்றும் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இச்சம்பவத்துக்கான நோக்கம் எதுவாக இருந்தபோதும் இவ்வித மிலேச்சத்தனமான செயல்கள் யாவும் சமய விழுமியங்களுக்கும் மனித நேயத்துக்கும் முரணானது. இதன் மூலம் எவ்வித வெற்றியையும் பெற்றுக்கொள்ள முடியாது.
எதிர்காலத்தில் இவ்வித செயல்கள் நடைபெறாதிருக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலாக மனித நேயத்துக்கு மதிப்புக் கொடுக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்ப முனைவோம். அத்துடன் அனைத்து சமூகங்களிலும் தீவிர மதவாதிகளை இனங்காணவும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் இன ஒருமைப்பாட்டிற்கும் ஒத்துழைக்க அனைவரும் முன்வர வேண்டும்" என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -