சம்பந்தன் சொல்வது அப்படி ஒன்றும் நடைபெறப் போவதில்லை


பாறுக் ஷிஹான்-
காணிவிடுவிப்பு சம்பந்தமாக எதிர்வரும் 29ஆம் திகதி இராணுவத்துடன் பேசி ஒரு சாதகமான முடிவை எடுப்போம் என்று சம்பந்தன் சொல்வது அப்படி ஒன்றும் நடைபெறப் போவதில்லை. இராணுவத்துடன் பேசி எதுவும் நடக்காது என்று சம்பந்தனுக்கும் தெரியும். தொடர்ந்தும் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். இது ஜனாதிபதி பிரதம மந்திரி அமைச்சரவை எடுக்க வேண்டிய முடிவு. தமிழ் மக்களின் பிரதிநிதி என்று சொல்லும் சம்பந்தன் போன்றோர் கேணயங்களா இருக்கிறார்களா? அல்லது புத்திசாலியாக இருக்கிறார்களா? என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில்  (14) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது
தேவைக்கு அதிகமான இராணுவம் வடக்கு கிழக்கில் இருக்கிறது. இராணுவம் குறைக்கப்பட்டிருந்தால் இவ்வளவு பிரதேசங்கள் நிட்சயமாக இராணுவத்தினருக்கு தேவைப்பட்டிருக்காது. வடக்கில் வன்முறை நடந்ததாக இல்லை. தென்பகுதியில் தொடர்ந்து வன்முறை நடைபெறுக்pறது. இவ்வாறான நிலையில் பெருந்தொகை இராணுவம் வடக்குக்கு தேவையில்லை. அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகின்றதா என்பது தான் இங்கிருக்கிற கேள்வி. இராணுவ ஆக்கிரமிப்பை குறைக்கின்ற பட்சத்தில் காணிகள் விடுவிக்கப்படும்.
இராணுவம் காணிகளை விடுவிக்க நிதியைக் கோருவது தமிழ் மக்களை ஏமாளிகளாக நினைத்து செய்யப்படும் விடயம். அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாக காணிகளை விடுவிக்க வேண்டும். புதிய முகாம்களை அமைப்பதற்கு தமிழ் மக்களுடைய புனர்வாழ்வு நிதிக்குள் கொண்டு போய் அந்த நிதியையும் எடுத்துவிட்டால் தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வு என்பது இல்லாமல் போய்விடும். இதனை உணர்ந்து கொண்டு அரசுடன் சம்பந்தன் சரியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் தமிழ் மக்களுக்கு சில நன்மைகள் ஏற்படக் கூடும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழ்த் தலைமைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரிந்தும் கூட சம்பந்தன் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்திருந்தார். பிரதமர் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அரசாங்கம் கவிழாமல் பாதுகாப்புக் கொடுத்தார். இந்த அரசாங்கத்தை பாதுகாத்து வைப்பதில் மிகப் பாரிய பங்களிப்பு செய்தார். ஆனாலும் கூட தமிழ் மக்களுக்கு உரித்தான எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.
அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லலை. 10 வருடங்கள் ஆகியும் முழுமையான காணிகளை விடுவிக்க முடியவில்லை. மாறாக காணிகளை சுவீகரிக்கிற ஒரு நிலை வருகிறது. வடக்கு கிழக்கு நிலத் தொடர்பை துண்டாடுகிற அடிப்படையில் காணிகளை அபகரிக்கிற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த அரசாங்கம் கவிழுகிற சூழ்நிலை வந்த போது கூட சில விடங்களை நிறைவேற்றி இருக்க முடியும். வரவு செலவு திட்டம் வந்த போது சில விடயங்களை நிறைவேற்றி இருக்க முடியும். இவை எல்லாவற்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராமுகமாக கைவிட்டுள்ளது. என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -