கல்முனையில் வன்செயல்கள் இடம்பெறின் ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் -வஃபா பாருக்


எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பின்னணியாக கொண்டு தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் வன்செயல்கள் வெடிக்கின்ற பட்சத்தில் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க வேண்டியவராக உள்ளார் என்று கிழக்கு தேசம் வஃபா பாருக் தெரிவித்தார்.

கிழக்கு தேச விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளருமான இவர் சாய்ந்தமருதில் உள்ள இவரின் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (11) வியாழக்கிழமை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு:-

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பின்னணியாக கொண்டு தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் விஷ்வரூபம் எடுத்து வருகின்றன. இன விரோத சக்திகள் இதை இலவச முதலீடாக்கி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில் கலவரம், களேபரம், வன்முறை ஆகியவற்றை பெரிய அளவில் தூண்டி விடுவதற்கு திட்டமிட்ட வகையில் சதி முயற்சிகள் மேற்கொண்டு உள்ளன. இவற்றை எல்லாம் கிழக்கு தேச விடுதலை இயக்கம் தீர்க்கதரிசனம், தூர நோக்கு ஆகியவற்றுடன் முன்கூட்டியே ஊகித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இரு அவசர கடிதங்களை அனுப்பி கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தப்பட்ட விடயத்தில் நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகித்து நீதியான சுமூக தீர்வை உடன் பெற்று தர வேண்டும் என்று கோரியது. ஆயினும் அவர் அது தொடர்பாக எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் இது வரை எடுத்ததாக தெரியவில்லை. எனவே இவ்விடயத்தில் நாம் அவரின் அலட்சிய போக்கை வன்முறையாக கண்டிக்கின்றோம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக நீதியான சுமூக தீர்வு எட்டப்பட முடியும். மாறாக இன உணர்வு ரீதியாக போராட்டங்களை நடத்தி எந்த தீர்வையும் அடைய முடியாது என்பதற்கு அப்பால் இன உணர்வு ரீதியான போராட்டங்கள் பிரச்சினையை மேலும் உக்கிரப்படுத்தி, தீவிரப்படுத்தி, கூர்மைப்படுத்தி விடும். எதிர்வரும் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் இருந்து கல்முனை வரை பாத யாத்திரை நடத்த தமிழின உணர்வாளர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கு பின்னால் வேறு உள்நோக்கங்களும் இருக்க கூடும் என்றும் ஐயுறவு கொள்ள நேர்ந்து உள்ளது. ஏனென்றால் கல்முனையையும் அண்டிய இடங்களையும் சேர்ந்த தமிழ் மக்களால் இப்பாத யாத்திரை முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அதில் குறைந்த பட்ச நியாயமாயினும் இருக்க முடியும். முஸ்லிம்கள் அதை விளங்கி ஜீரணித்து கொள்வார்கள். ஆனால் மட்டக்களப்பில் இருந்து கல்முனையை நோக்கிய பாத யாத்திரை என்பது முஸ்லிம்களால் வேறு விதமாகவே விளங்கி பார்க்கப்படும். இதனால் இப்பாத யாத்திரை முஸ்லிம் கிராமங்களை கடந்து முன்னெடுக்கப்படுகின்றபோது நடக்க கூடாதவை நடந்து விடலாம் என்கிற நியாயமான அச்சம் கண் முன் தெரிகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -