புல'னாய்'வு ஊடகம்
++++++++++++++++
Mohamed Nizous
சில ஊடகப்
புல'னாய்'வுகளின்
சில்லறைத் தனத்தின்
பல'னாய்'
பல நாய்கள்
குரைக்கத் தொடங்கி உள்ளன.
'சீ' 'என்'று சொல்லுமளவு
சின்னத் தனமாய்
செய்தி வெளியிடும்
சில்லறை ஊடகம்.
உள் நாட்டிலே
ஓணான் பிடிக்க வழியில்லை.
பக்கத்து நாட்டிலே
பாம்பு பிடிக்க வரும்
பரதேசி ஊடகங்கள்.
குண்டு வெடிச்சு
கூரை பற்றி முடியு முன்
கண்டு பிடிச்சு
கலர்ப் படமும்
காட்டி விட்டார்கள்
காரணம் யார் என்று.
ஒரு
வளைந்த மேசையும்
வார்த்தை ஜாலமும்
வசதியான கமெராவும் இருந்தால்
நானும் ஊடகம்தான்
நீயும் ரெளடிதான்
இவர்கள் நினைப்பில்.
உண்மை வெளிச்சமாகும் முன்
உன் மை வெளிச்சத்தில்
உரியவர்களைக் கண்டுபிடித்தாயா?
கேட்கத் தோன்றும்
கேடு கெட்டவர்களிடம்.
இந்த
ஊடப் பயங்கரவாதிகளை
ஒழிக்க வேண்டும் முதலில்
இவர்கள்
அப்பாவிகளைக் கொல்லும்
அரக்கர்களை விட
ஆபத்தானவர்கள்
அமைதியான உலகுக்கு