எச்.எம்.எம்.பர்ஸான்-
கடந்த (21) ம் திகதி நாட்டில் பல பாகங்களிலும் இடம்பெற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பகுதிகளில் வர்த்த நிலையங்கள் மற்றும் மதஸ்தானங்களில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளிலுள்ள மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
குறித்த பயங்கரவாதத் தாக்குதலை அப்பகுதிகளிலுள்ள இஸ்லாமிய நிறுவனங்கள், அமைப்புக்கள் போன்றவை கண்டித்துள்ளதோடு அந்த நாசகார செயலை மேற்கொண்டோர்களை அரசு இனங்கண்டு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.