அண்மைய குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தெமட்டகொடயில் கைதாகிய வியாபாரி யூசுப் இப்ராஹிம் மற்றும் அவர்களது புதல்வர்களான இன்ஷாப் அகமட்(33),இல்ஹாம் அகமட்(30 ) ஆகியோரின் விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. 9பிள்ளைகளின் தந்தையான 65 வயதான யூசுப் இப்ராஹிம் என்பவருக்கு , jvp கட்சியில் கடந்த தேர்தலில் தேசியப்பட்டியலில் இருந்ததாக விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.எனினும் கைதாகிய நபர் தேசிய பட்டியலில் இருந்தபோதும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை எனவும் கட்சியின் உறுப்பினர் இல்லை என்றும், jvp செயலாளர் டில்வின் சில்வா இது பற்றி ஊடகங்களுக்கு தெரிவித்துத்துள்ளார்.
2015 ம் ஆண்டின் தேர்தலில் தேசியப்பட்டியலில் தேர்தலில் போட்டியிடாத பல தொழிலில் ஈடுபடும் பல்லினத்தவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கும் முகமாகவே பெயர்களை உள்வாங்கியதாக கூறி உள்ளார். யூசுப் இப்ராஹிம் என்ற இந்த வியாபாரி பல கட்சிகளுடனும் நெருங்கிய கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்களாக அவர்களுடன் எடுத்த புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகி உள்ளன.
யூசுப் இப்ராஹிம் குடும்பம் தெமட்டகொடயிலுள்ள ஆடம்பர 3மாடிகள் கொண்ட வீட்டில்வசித்த நிலையிலேயே, குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் கைதாகினர்.Bmw சொகுசு வாகனம் ஒன்றும் தெமட்டகொட வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வேளையில் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மாலை வேளை , பொலிசார் பரிசோதனை செய்த வேளையில் ,சினமன் கிரேண்ட் ஹோட்டலின் தண்ணீர் போத்தல் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டது.இந்த சந்தர்ப்பத்தில் தூரத்தில் இருந்து இரண்டு குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதன் காரணமாக குற்றப்புலனாய்வு பொலிசார் மூவர் உற்பட இம்ஷான் அகமட் இப்ராஹிமின் மனைவி (25) மற்றும் இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
ஷங்ரிலா மற்றும் சினமன் கிரேன்ட் தாக்குதல்களுக்கு இப்ராஹிமின் மகன்களான இம்க்ஷான் அகமட் மற்றும் இல்ஹாம் அகமட் ஆகியோரே நடாத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலை திட்டமிட முதல் இவர்கள் இந்த ஹோட்டல்களுக்கு அடிக்கடி வந்து போயுள்ளனர்.
19ம் திகதி மனைவியிடம் ஸாம்பிதா செல்வதாக மனைவியை எயாபோட் வரை அழைத்து சென்றுள்ளார்.எனினும் குண்டுவெடிக்க 1மணித்தியாலம் முன்பதாக வெள்ளி காலை 7.30மணிக்கு தொலைபேசியில் சுகம் விசாரித்துள்ளார்.20ம் திகதி பகல் எங்கிருந்தார் என்ற விபரம் இல்லை.20ம் திகதி சினமன் கிரேன்டில் தங்குவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.21 ம் திகதி சினமன் கிரே ன்ட் கீழ்தளத்தில் காலை 8.30அளவில் ஈஸ்டர் காலை உணவுக்காக தப்ரபேன் உணவகத்தில் மக்கள் சென்றிருந்த வேளையிலேயே, வெடிகுண்டு பையுடன் சென்று குண்டுதாரி பழங்களை தனக்கு பரிமாறியதுடன் ,அங்குமிங்கும் திரிந்து அதிக சனமுள்ள பகுதியை நோக்கி சென்றவுடன் வெடிக்க செய்துள்ளார்.
யூசுப்இப்ராஹிமின் மூத்த மகன் கண்டியில் பிறந்தவர்.இலக்கம் 115, சிரிமத் குடாவத்தை ரோட் ,கண்டி என்ற விலாசத்தில் உள்ள ஆடம்பய வீட்டிலேயே இப்ராஹிமுடன் மூத்த புதல்வர் இம்ஷான் வசித்துள்ளார். வெல்லம்பிட்டி,மொனராகலையில் இவர்களுக்கு தொழிற்சாலைகள் இருந்துள்ளன.இம்ஷானின் வெல்லம்பிட்டி தொழிற்சாலையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.இத்தொழிற்சாலையில் இந்திய பங்காள தேச இந்திய தொழிலாளிகள் வேலை செய்துள்ளனர்.இன்ஷான் வெளிநாடுகளிலிருந்து செம்பு உற்பத்திகளுக்கான மூலப்பொருற்களுடன் இந்த ஆபத்தான வெடிமருந்து இரசாயனங்களையும் இறக்குமதி செய்திருக்கலாம், தினமும் தொழிற்சாலைக்கு வந்து முகாமையாளருடன் மட்டும் 30 நிமிடம் வரை இன்ஷான் கதைப்பார் அத்துடன் இன்ஷான் இஸ்லாமிய பக்தி நிறைந்தவராக காட்டிக்கொள்ளவில் லை ஆயினும் வெளிநாட்டு நிதிகள் கிடைத்திருக்கலாம் எனவும் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இத்தொழிற்சாலையில் தற்கொலை குண்டுக்கு பயன்படுத்தப்படும் triacetone/ triproxide எனப்படும் ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் "சாத்தானிய தாய்" மூலப்பொருளும் பாவிக்கப்பட்ட தயாரிப்புகளும் கைப்பற்றப்படுடுள்ளன.
இச்சம்பவத்தின் பின் கைதான யூசுப் மற்றும் அவரது புதல்வர்கள் இருவர் உற்பட தெமட்டகொட பிரதேசத்தில் 13 பேர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு,இதில் மேலதிக விசாரணைக்காக 10 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.