காரைதீவு நிருபர் சகா-
ஜனாதிபதியின் சிந்தனையிலுருவான புத்தாண்டு சுபநேர மரம்நடுகை
தேசியவேலைத்திட்டம் காரைதீவு பிரதேசசபையினால் இன்று (17)
புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
பிரதேசசபை வளாகத்தில் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இம்மரம் நடுகைவிழா இடம்பெற்றது.
இவ்விழாவில் உறுப்பினர்களான சி.ஜெயராணி ச.நேசராசா எம்.பஸ்மீர் எ.ஜலீல் உள்ளிட்ட ஆகியோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை
நட்டுவைத்தனர்.
சபைச்செயலாளர் அ.சுந்தரகுமார் பிரதமமுகாமைத்துவ உதவியாளர் திருமதி
வசந்தநாயகி நிதிஉதவியாளர் எம்.ரகுநந்தன் மற்றும் சபை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு மரங்களை நட்டு தேசியவேலைத்திட்டத்திற்கு அணிசேர்த்தனர்.