Daily Mirror பத்திரிக்கையில் வியாழக்கிழமை (25) பிரசுரித்த கட்டுரை தொடர்பில் ஊடக மறுப்பறிக்கை ஒன்றை காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா வெளியிட்டிருந்தது அதில் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா குறிப்பிட்டுள்ளதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் முழு மனித இனத்திற்கும் விரோதமான ஒரு செயற்பாடு என்ற வகையில் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா தனது ஆழ்ந்த வேதனைகளையும் , அனுதாபங்களையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவித்திருக்கின்ற நிலையில் வியாழக்கிழமை (25) அன்றைய Daily Mirror பத்திரிக்கையில் Hafeel Far is என்பவரால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதாக உண்மைக்கு புறம்பான வெளியிட்டமைக்கு காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக அவ் ஊடக மறுப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது..
மேலும் அவ் அறிக்கையில் தெறிவித்துள்ளதாவது காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா காத்தான்குடியில் உள்ள அனைத்து உலமாக்களையும் ஒன்றிணைத்து பொதுமக்களுக்கு மார்க்க வழிகாட்டல்களை வழங்கும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் ஒரு கிளை நிறுவனமாகும் . இவ்வாறான கடும்போக்காளர்களின் சிந்தனைக்கும் ஜம் இய்யதுல் உலமாவுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பதை ஜம் இய்யதுல் உலமா பொறுப்புடன் தெறிவித்துக்கொள்கிறது என இவ் ஊடக மறுப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.