சுமார் 1 கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் கல்முனைக்குடி – தைக்கா வீதி காபட் வீதியாக புனருத்தானம்.


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
திமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பேரிலும் கௌரவ பிரதம மந்திரி ரணில்விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலிலும் , நெடுஞ்சாலைகள் , வீதி அபிவிருத்தி , மற்றும் பெற்றோலிய வளத்துறைஅமைச்சர் கபீர் காசிம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலும் மனங்களை இணைக்கும் ” ரண் மாவத் ( தங்கப் பாதை ) திட்டத்தின் கீழ்காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவிருக்கும்கல்முனை பிரதேச செயலகப்பிவிற்குட்பட்ட கல்முனைக்குடி ” தைக்கா வீதி”யின் நிர்மாணப்பணிகளை உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் ஐ.எல்.ஏ.பாரி தலைமையில் இடம்பெற்ற மேற்படிநிகழ்வில் கல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளரும் கல்முனை பிராந்திய அபிவிருத்தக்குழுஇணைத்தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெயர்ப்பலகையினைதிரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று – கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எம்.பி.அலியார் , அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி இளைஞர் அமைப்பாளர் ஏ.எச்.எச்.எம்.நபார் உள்ளிட்ட ஐக்கிய தேசியகட்சியின்முக்கியஸ்தர்கள் , பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சுமார் 1050 மீற்றர் நீளமான இவ்வீதிக்கு 1 கோடியே 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -