மோடி காதை பிடித்துக் கொண்டு 100 தோப்புக்கரணம் போட வேண்டும்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் பான்குரா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி அவர்களே, நிலக்கரி சுரங்க ஊழலில் எங்களுக்கு பங்குண்டு என நீங்கள் கூறியதை நிரூபிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டை நீங்கள் நிரூபித்து விட்டால், 42 தொகுதிகளிலும் வேட்பாளர்களை வாபஸ் பெற்று விடுகிறேன்.

அப்படி இல்லையென்றால், பொதுமக்கள் மத்தியில் நீங்கள் காதை பிடித்துக் கொண்டு 100 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். எனது சவாலுக்கு நீங்கள் தயாரா? என கேள்வி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -