ஆளுநர் அசாத் சாலியின் முயற்சியின் கீழ் 10மாதிரிப் பாடசாலைகள் திட்டம்


மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் முயற்சியின் கீழ் சகல வசதிகளுடன் கற்றலுக்கு உகந்த சூழலுடன் 10மாதிரிப் பாடசாலைகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாகாணக் கல்விப்பணிப்பாளர் பீ. ஶ்ரீலால் நோனிஸ், கல்வி அமைச்சின் செயலாளர் ரீ. விஜயபந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலையின் அதிபர்கள் மற்றும் அப்பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இதன் போது கல்வி அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில​யே 10 மாதிரிப் பாடசாலைகள் திட்டம் ஏற்படுத்தப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார்.
லின்ஸ்சே மகளிர் கல்லூரி, புனித கிளயாஸ் கல்லூரி, ஆதுர்ஷா கல்லூரி, ஜனாதிபதி கல்லூரி – கொட்டாஞ்சேனை, புனித யோவான் கல்லூரி – மட்டக்குளிய, புனித யோவான் கல்லூரி – தெமட்டகொடை, ஏ. ஈ. குணசிங்க மகா வித்தியாலயம், புனித மரியாள் பாடசாலை – பொல்வத்த, டி. எஸ். ஜெயசிங்க மத்திய கல்லூரி – தெஹிவளை மற்றும் இலுகோவித்த வித்தியாலயம் –ஹோமாகம போன்ற பாடசாலைகள் இத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
தான் கல்வி பயின்ற டி. எஸ் சேனாநாயக்க கல்லூரியில் மாணவர்கள் மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் சரிசமமாக பழகுவதைப் போன்றதான சூழ்நிலை மாணவர்கள் அனைவரிடமும் உருவாக்குவதே இந்த பத்து மாதிரிப் பாடசாலை திட்டத்தின் முக்கிய நோக்கமாகுமென ஆளுநர் தெரிவித்தார். இது ஏனைய இனத்தவரின் சமய, கலாச்சார, வாழ்க்கை முறையின் அம்சங்களைக் கற்றுக் கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக மாணவர்களுக்கு அமையும் எனவும் குறிப்பிட்டார்.
போதுமான ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் , தேவையான அடிப்படை வசதிகள் இப் புதிய திட்டத்திற்கு வழங்கப்படும் எனவும், ஏனைய பாடசாலைகளிலிருந்து இம் மாதிரிப் பாடசாலைகளை வேறுபடுத்திக் காட்டக் கூடியதான பொதுவான அம்சங்கள் அடங்கியிருக்கும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட பாடசாலையின் அதிபர்கள் தங்களின் பூரண ஒத்துழைப்பை கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கும், தங்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -