காரைதீவு சகா-
சித்திரைப்புத்தாண்டைமுன்னிட்டும் கல்முனை சைனிங் விளையாட்டுக்கழகத்தின் 37வது ஆண்டு நிறைவையொட்டியும் நடாத்தப்பட்ட அணிக்கு 11பேர் கொண்ட மென்பந்துக்கிரிக்கட் சுற்றுப்போட்டியில்பாண்டிருப்பு காந்தி விளையாட்டுக்கழகம் வெற்றியினைப்பெற்று சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொடது.
இறுதிப்போட்டிக்கு பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகமும்பெரியநீலாவணை வெஸ்ரன் விளையாட்டுக்கழகமும் தெரிவாகியிருந்தது.வெற்றிபெற்ற அணிக்கான கிண்ணத்தை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டு வழங்கிவைப்பதைக்காணலாம்.