சிப்னாஸ் ஹாமி-
எமது இலங்கை நாடு நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட, இயக்கை வளங்கள் நிறைந்த நாடாகும் எமது நாட்டைப் பொறுத்தவரை பல்லின சமூகங்கள் வாழ்கின்ற பல்லின கலாச்சாரத்தைக் கொண்ட நாடாகும். உதாரணமாக:
பௌத்த சமயமும் அதற்கென்ற கலாச்சாரங்களும்
இந்து சமயமும் அதற்கென்ற கலாச்சாரங்களும்
இஸ்லாமிய சமயமும் அதற்கென்ற கலாச்சாரங்களும்
கிறிஸ்தவ சமயமும் அதற்கென்ற கலாச்சாரங்களும்
என்றவாறு சுதந்திரமாக காணப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க கடந்த சில நாட்களுக்கு முன் (உயிர்த்த ஞாயிறு) தினத்தில் நடைபெற்ற இஸ்லாமிய பெயர் தாங்கிகளால் மேற்கொள்ளப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேட்சத்தனமான தாக்குதல் இலங்கை முஸ்லிகளை பாரிய ஒரு மனஉழைச்சலுக்கு உள்ளாகியுள்ளது.
காரணம் : அத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் “முஸ்லிம்கள்” என்ற இனவாத ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களே.
இப்பிரச்சாரமானது சந்தர்ப்பம் காத்துக் கொண்டிருந்த இனவாதிகளுக்கு தீனி போடும் ஒன்றாக மாறி கடந்த (2019.மே.11-13) களில் ஹெட்டிபொல, குளியாப்பிட்டி, நிக்கவரெட்டிய, மில்லேகொட, கலப்பிட்டியகம, கல்பான, மினுவாங்கொடை போன்ற பகுதிகளில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பேரளிவை ஏற்படுத்தியது.
இப்பெரும்பான்மை அடிப்படை வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் முஸ்லிம்களின் சொத்தக்கள் சேதப்படுத்தியும், ஏரித்தும் உள்ளனர். இவைகளை காண்கின்ற போது முஸ்லிம்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கின்றது.
இதனை சரிசெய்ய வேண்டிய பாரிய பொறுப்பு சிறுபான்மை சமூகம் என்ற வகையில் எமக்கு உள்ளது.
அந்தவகையில் இலங்கை ஜனநாயக சேசலிசக் குடியரசு அரசியல் யாப்பு அத்தியாயம்-3, அடிப்படை மனித உரிமை எனும் பகுதியில் உள்ளடங்கியுள்ள பிரகாரம்.
சர்த்து (10) இலங்கையர் ஒருவர் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருத்தற்கான அல்லது மேற்கொள்ளுதற்கான சுதந்திரமுட்பட சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்க்கு உரித்துடையவராத வேண்டும்
சர்த்து 12 (2) இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற்கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகையள காரணங்களுக்குள் எந்த ஒன்று காரணமாகவும் எந்தப் பிரஜையும் ஓரங்கட்டுதல் ஆகாது
என்றவாறு மதச்சுதந்திரத்திற்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் சில அரசியல் இலாபத்திற்காக சிலரால் இச்சுதந்திரங்கள் இல்லாதொழிக்கப்படுகின்றன.
கடந்த காலங்களில் பேரின வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலி மொத்தமாக 27 பள்ளிவாயல்கள், 1 மத்ரஸா, பல வீடுகள் அதே போன்று புனித குர்ஆன்கள் பிரதிகளை எரித்தும் அதன் மீது சிறுநீர் கழித்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
குருநாகல் மாவட்டத்தில் தாக்கப்பட்ட பள்ளிவாசல்களாகமஸ்ஜிதுல் ஹுதா– கொட்டாம்பிட்டிய
மஸ்ஜிதுல் லுஹ்லு– மல்வத்த வீதி, கொட்டாம்பிட்டிய
மஸ்ஜிதுல் தாருஸ்ஸலாம்– நிக்கபிட்டிய
மஸ்ஜிதுல் அப்ரார்– மடிகே, அனுக்கென
மஸ்ஜிதுல் ஆலியா– பூவெல்ல
மஸ்ஜிதுல் நூர் –போகொல்ல பாதை, ஹெடிபொல
மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல்– இஹல கினியம – வீரபொக்குன
அப்ரார் தக்கியா –இஹல கினியம
ஆயிஷா தக்கியா– இஹல கினியம
மஸ்ஜிதுல் ஜாமிஆ– ஹொரம்பாவ
மஸ்ஜிதுல் அக்ஸா தக்கியா– கரன்திபொல
ஹம்மாலியா தக்கியா–பொன்கொல்ல –பண்டார கொஸ்வத்த
பிர்ருல் வாலிதைன் தக்கியா– செம்பேவ சுனந்தபுர
மஸ்ஜிதுல் இஸ்லாம் –வீதியவெல –நாகொல்லாகொட
தோரகொட்டுவ ஜும்ஆ பள்ளிவாசல்– கொன்னாவ– தோரகொட்டுவ
சுவைக் தக்கியா– கொன்னாவ
தக்கியா – பென்னலி கடவெர –மொரகோன்ன
கைராத் ஜும்ஆ பள்ளிவாசல்– யாயவத்த –கிரிந்தவெவ
ஹசனாத் தக்கியா –கலபிட்டியகம– நிக்கவரட்டிய
நிக்கவரட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் –நிக்கவரட்டிய
பெனடிக்வத்த தக்கியா– எஹத்தமுல்ல– நாகொல்லாகொட
மாபாகம தக்கியா –பரம்பொல– ஹல்மில்லாவெவ
மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் –அசனகொட்டுவ –குறத்திஹேன
புத்தளம் மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்களாக
மஸ்ஜிதுன் நூர் –மைகுளம், சிலாபம்
நூர்வீதி ஜும்ஆ மஸ்ஜித்– புத்தளம் வீதி, சிலாபம்
மலாய் பள்ளிவாசல்– தர்காமாவத்தை, சிலாபம்
மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்களாக
மினுவங்கொட ஜும்ஆ பள்ளிவாசல்
அரபுக்கல்லுரியாக
ஜமாலியா அரபுக் கல்லூரி– கொட்டம்பிட்டிய
27 பள்ளிவாயல்களுக்கும் 1 அரபுக்கல்லூரிக்கும் தாக்கப்பட்டு
சேதமாக்கப்பட்டுள்ளது.
இதனைப் பார்க்கின்றபோது இலங்கை அரசியல் யாப்பின் பிராகரம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ள விடயம் தெளிவாக தெரிகின்றது. எனினு இச்சம்பவங்களுடக் தொடர்புட்டனர் என்ற அடிப்படையிரல் கைது செய்யப்பட்ட சில விடுதலை செய்யப்பட்டுள்ளர் என்பது நிதர்சனமான உண்மை இவ்வாறான மிலேட்சத்தனமான தாக்குதல் தொடரும் என்றால் இது பிற்காலத்தில் வேறுவிதமான மாறுதல்களை ஏற்படுத்துவதற்கும் வாய்புள்ளது. காரணம்.
அந்தவகையில் எமது முன்னோர்கள் கஸ்டத்துக்கு மத்தியில் எமக்குப் பெற்றுத்தந்த அதிகமாக மதச்சுதந்திரங்கள் எம்மவர்களாலேயே இழக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்
மத்ரஸா கல்வி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் கட்டுப்படுத்தல்
அறபு எழுத்தில் எழுதப்பட்ட பததைகளை நீக்குதல்
முகம் மறைத்தல்
போன்ற பல்வேறு நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறி மாற்றியமைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது. இவைகளை பாதுகாக்காமல் குருடர்களாக இருப்போம் என்றால் இதில் பாதிக்கப்படுவது எமது சந்ததியினர் என்பதை மறக்கவும், மறுக்கவும் முடியாது.
இதனை சரிசெய்வதற்கு சமூகம் என்ற வகையில் நாம் அனைவரும் முன்வரவேண்டும் காரணம், ஏனைய மாற்று மதச் சகோதரர்களும் கூட எமக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு காரணம். எமக்கும் அவர்களுக்கு மத்தியில் போதிய புரிதல்களும் விளக்கங்களும் அவர்களுக்கு நாம் கொடுக்காமையும், முஸ்லிம் என்ற தனித்துவத்தை நாம் அவர்களிடம் பேணாமையுமே.
எனவே தான் இயக்கங்கள் என்ற வகையில் பிரிந்து உள்ளத்தில் குரேதத்தையும், காட்டிக்கொடுப்பையும் வைத்திருக்கக்கூடிய எம்மில் சிலர் முதலில் அதனை விட்டு விட்டு சமூகத்தையும், எமது சுதந்திரங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றினைந்து முன்வரவேண்டும், மாற்று மதத்தவர்களுக்கு மத்தியில் புரிதல்களையும், இஸ்லாம் பற்றிய தெளிவுகளையும் வழங்க வேண்டும் அதற்காக கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். அப்போதே எமது சந்ததியினர் சுதந்திரமாக வாழ வழி செய்ய முடியும். அவ்வாறில்லா விட்டால் அவர்களும் அவ்வாறான இனச் சுத்திகரிப்புக்கு மத்தியில் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.