கனடாவில் உயர்விருது பெற்ற 300பேரில் ஒரேயொரு தமிழன் கல்முனை விஸ்வலிங்கம் !


காரைதீவு நிருபர் சகா-
னடா நாட்டில் உள்ள பிரம்டன் மாநகரசபையால் ”Brampton CITIZENS AWARDS” விருது வழங்கும் நிகழ்வு கடந்த 22 ஆம் திகதி நடைபெற்றது.
இதில் சமூக சேவை, தன்னார்வலருக்கான விருது கல்முனையை சொந்த இடமாக்கக்கொண்ட கனடாவில் வசித்துவரும் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை (விசு) அவர்களுக்கு volunteer of the year 2018 விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுளார்.

விருதினை கனடா பிரம்டன் மாநகர முதல்வர் பற்றிக் விரோவ்ண் அவர்கள் வழங்கிவைத்தார்.
நீண்ட கால சேவையாளர்கள், சமூக சேவையாளர்கள், சமூக சேவைத் தொண்டர்கள், கலைஞர்கள் என பல பிரிவுகளாக சுமார் முந்நூறு பேர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்னர்.
இதில் விருது பெற்ற ஒரே ஒரு தமிழர் விஸ்வலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .தமிழருக்கும் அத்தோடு கல்முனை பிரதேசத்திற்கும் இது பெருமையாகும்.
கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம் கடந்த 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கனடாவுக்கு புலம் பெயர்ந்து வசித்து வருகிறார். இலங்கையில் விசிக்கும்போதும் பல சமூக சேவைகளில் ஈடுபட்ட இவர் புலம் பெயர்ந்த பின்னரும் பல்வேறு பொது அமைப்புக்களில் இணைந்து சமூகப்பணிகளை முன்னெடுத்துவரும் ஒரு சிறந்த சமூகப்பற்றாளரும் சமூக சேவையாளருமாவார்.
கனடா சுவாமி விபுலாநந்தர் கலை மன்னறத்தின் நிருவாகசபை உறுப்பினராகவும் மற்றும் பாடும் மீன்கள், சீடாஸ், எமது சமூகம், கல்முனை FRINENDCHIP ASSOCIATION ,நாம் கல்முனை ஆகிய அமைப்பகப்களில் பொறுப்புக்களில் இருந்து தாயகத்தில் மாணவர்களின் கல்வி சமூக முன்னேற்ற செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த விருதினை பெறுவதற்கு தனக்கு உறுதுணையாக இருந்த தர்மலிங்ஙகம் லிங்கேஸ்வரன் அவர்களுக்கு தனது நன்றியினையும் விசு தெவிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -