01. நேபாளத்தின் ஆனந்தகுடி மஹா விகாரை மற்றும் ராத்தோ மௌச்சிந்திராநாத் இந்து ஆலய புனரமைப்பதற்கான திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 19ஆவது விடயம்)
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சுவயம் புனாகி ஆனந்தகுடி மஹா விகாரை மற்றும் லலி பூர்கி ராத்தோ மௌச்சித்திராநதத் இந்து ஆலயத்தையும் இலங்கை அரசாங்கத்தினால் புனரமைப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்படடிருந்தது. இந்த மறுசீரமைப்புக்காக இதுவரையில் 299.54மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் ஆனந்தகுட்டி மஹா விகாரையின் புனரமைப்புப் பணிகளில் சுமார் 84 சதவீதமானவை இயற்பியல் மேம்பாடு மற்றும் ராத்தோ மெச்சித்திராநாத் இந்து ஆலய மறுசீரமைப்புப் பணிகளில் சுமார் 43 சதவீதமான அளவு இயற்பியல் ரீதியலான பெறுபேறுகாணப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்புப் பணியை உத்தேசிக்கப்பட்ட வகையில் பூர்த்தி செய்வதற்காக மேலும் தேவையான நிதி தொடர்பில் பௌத்த சாசனம் மற்று; வடமேல் அபிவிருததி அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா சமர்ப்பித்த ஆவணத்தை கவனத்தில் கொண்டு 114 மில்லியன் ரூபாவை மேலதிக தொகையாக வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02.1989 இல 13 கீழான உற்பத்தி வரி (விசேட ஒழுங்கு விதிகள்) சட்டத்தில் நிர்வாகப் பணிகளை சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்
1983ஆம் ஆண்டு இல 13இன் கீழான உற்பத்தி வரி (விசேட ஒழுங்கு விதிகள் சட்டத்தினதும் அதனுடன் சம்பந்தப்பட்ட திருத்தத்திற்கு அமைவாக இந்த சட்டத்தின் நிர்வாகப் பணிகள் உற்பத்த வரி பணிப்பாளர் நாயகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தி வரி சட்டத்தின் கீழான நடவடிக்கைகளுக்காக உற்பத்தி வரி (விசேட ஒழுங்கு விதிகள்) பணிப்பாளர் நாயகம் என்ற ரீதியில் சுங்க பணிப்பாளர நாயகத்தை நிமியப்பதற்கும் இதற்கமைவாக சம்பந்தப்பட்ட சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்த தீர்மானத்திற்குஅமைவாக இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கமைவாக குறிப்பிட்ட சட்டத்தை நடைமுறைபடுத்தும் போது ஏற்படும் சில சிரமங்களை தவிர்த்துக் கொள்வதற்காக உற்பத்தி வரிக்கு உட்படக்கூடிய பொருட்கள் தொடர்பில் வரி விதித்தல் வரி அறவிடுதல் வரி நிலுவையை அறவிடுதல் கூடுதலாக அறவிடப்பட்டவரியை திருப்பி செலுத்துவதற்காக சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரத்தை வழங்குவதற்காக (விசேட ஒழுங்கு விதிகள்) சட்டத்தை திருத்துவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
03. கொழும்பு பல்கலைகழகத்தில் வைத்திய பீடத்திற்காக நிர்மாணிக்கப்படும் 17 மாடி கட்டிடத் தொகுதிக்காக 5000 மில்லியன் ரூபாவை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)
கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்திற்காக 17 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கான அனுமதி இதற்கு முன்னர் வழங்கப்பட்டதுடன் இந்த கட்டத் தொகுதியை அமைப்பதற்காக நிதி வசதியை அந்த ஒப்பந்தக்காரருக்கு வழங்கும் பொருட்டு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட நிர்மாணப்பணிக்கு தேவையான 5000 மில்லியன் ரூபாவை இலங்கை வங்கியின் மூலம் வழங்குவதற்கான உடன்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வசதிகளை செய்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04.2018ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான எஞ்சியத் தொகையை செலுத்தும் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் (நிகழ்ச்சி நிரலில் 26ஆவதுவிடயம்)
2018ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொடுப்பனவுகளை செலுத்துதல் அரசாங்க வருமானம் எதிர்பார்த்த ரீதியில் அதிகரிக்காமையினால் ஏற்பட்ட வருமான குறைப்பாட்டின அடிப்படையில் அந்த வருடத்தில் இவற்றை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கமைவாக இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக குறிப்பிட்ட எஞ்சியத் தொகையை செலுத்துவதற்காக மேலதிக நிதியை ஏற்பாடு செய்யும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
05. மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுதாபனத்திற்கு மேலதிக நிதியுதவியை பெற்றுக் கொடுத்தல் (நிழ்ச்சி நிரலில் 27ஆவது விடயம்
லவருடகாலமாக குறைவான செயல்திறன் அடிப்படையை பதிவு செய்துள்ள மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தை புனரமைப்புக்கான பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு அவற்றின் ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்துவது அரசாங்கத்திற்கு வரவு செலவுத்திட்டத்தில் பாரிய சுமையாக அமந்துள்ளது. இந்த நிறுவனத்தை மறுசீரமைத்து இலாபமிக்கதாக முன்னெடுத்து வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கு மேலும் குறிப்பிடத்தக்க காலம் செல்லக்கூடும் என்பதினால் 2019 ஏப்ரல் மாதம் தொடக்கம் ஜுன் மாதம் வரையில் இந்த நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளம் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்கு 113 மில்லியன் ரூபா மானியத்தையும் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்கு 78 மில்லியன் ரூபா மானியத்தையும் வழங்குவதற்காக அரச தொழிற்துறை மலையக உரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. ஹெடஓய பன்முக செயற்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வசதிகளை செயய்தல் (நிகழ்ச்சி நிரலில் 30ஆவது விடயம்)
சியம்பலாண்டுவ மடுள்ள லஹுக்கல மற்றும் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரவுகளுக்கு நீர்பாசனம் மற்றும் குடிநீரை வழங்குதல் இந்த பிரதேசத்தில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக ஹெடஓய பன்முக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச பல்வேறு பட்ட பணிகளுக்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது ஏற்படக்கூடிய நடைமுறைப் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவும் இதன் மூலம் அழுத்தத்திற்கு உள்ளாகும் பிரதேச மக்களின் தேவைகள் தொடர்பில் கவனத்தில் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரதும் நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக்கொண்ட செயற்பாட்டு படையணி ஒன்றை அமைப்பதற்காக நகரத்திட்டமிடல் நீர்விநியோக மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் மற்றும் விவசாய கிராமிய பொருளாதார கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்களும் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரை மற்றும் அந்த உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமைச்சர்களைக் கொண்ட துணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்கான பன்முக தரப்பு செயற்பாடு திட்டம் - 2016 தொடக்கம் 2020 வரை (நிழ்ச்சிநிரலில் 35ஆவது விடயம்)
இலங்கையிலுள்ள மக்களுக்கு எற்படும் நோய்களில் 70 வீதமானவை இருதய பாதிப்பு , நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றா நோயாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவை தொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இவை அதிகரித்துள்ளமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் தொற்றா நோயை கட்டுப்படுத்துவதற்காக 2016 – 2020 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2019ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மானியத்தில் பொதுமக்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார பேஷாக்கு சுதேசிய வைத்தியத்துறைஅமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. களுத்துறை பெரிய ஆஸ்பத்திரியை அபிவிருத்தி செய்தல் (சிகழ்ச்சி நிரலில் 36ஆவது விடயம்)
இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய பகுதிகளை அண்டியுள்ள மாவட்டங்களில் வாழும் பொதுமக்களுக்கு சகாதார சிகிச்சை சேவை களுத்துறை பெரிய ஆஸ்பத்திரியினால் வழங்கப்படுகிறது.. இந்த ஆஸ்பத்திரி கட்டிடங்கள் சுமார் 50 வருட காலம் பழமையானதுடன் அவற்றை துரிதமாக சீர்செய்வதன் தேவை அடையாளங் காணப்பட்டுள்து. இதற்கமைவாக நோயாளர்களுக்கான சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் களுத்துறை பெரிய ஆஸ்பத்திரிக்கு பொதுவசதிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றும் வெளிநோயாளர்களுக்கான கட்டிடம் ஒன்றும் நோய் ஆய்வு நடவடிக்கைகளுக்கான கட்டிடம் ஒன்றும் லொன்டரி (சலவை) ஒன்றும் சத்திர சிகிச்சை வாட்டு கட்டிடம் ஒன்றும் அலுவலக பணியாளர்களுக்கான தங்குமிட வசதிகளுடனான உத்திகோபூர்வ தங்குமிடத்தை நிர்மாணித்து அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக உத்தேச அபிவிருத்தி திட்டத்தை 6221 மில்லியன் ரூபா முதலீட்டுன் நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதாரம் போஷாக்கும் மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேகாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. அளவீடு தரம் மற்றும் சேவை திணைக்களத்தை புனரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 41ஆவது விடயம்)
அளவீடுஅறிவியல் அளவீடு கைத்தொழில்அறிவியல் அளவீட்டு; மற்றும் நாளாந்த அளவீட்டு அறிவியல் ஆகிய துறையின் கீழ் பணிகளை மேற்கொள்ளும் அளவீட்டு அலகு தரம் மற்றும் சேவை திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் சேவை மிகவும் பயனுள்ளதாகவும் செயல்திறன் மிக்க முறையில் மேற்கொள்ளும் பொருட்டு இந்த திணைக்களத்தின் நிர்வாகப் பணிகள் சேவைக்கு இணைத்துக்கொள்ளும் விதிமுறைகள் பணிகள் மற்றும் அளவீடு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பணிகளை சீர் செய்ய வேண்டும் என்பது அடையாளங் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவனம் செலுத்த்p தேவையான சிபார்சுகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கென கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் நீண்டகால இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. துறைமுக நகர நிலப்பகுதியை விசேட வலயமாக முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 44ஆவது விடயம்)
தேசிய பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக உயர்வான பெறுமதியைக்கொண்டதும் வெளிநாட்டு முதலீட்டை கவருவதற்குமாக கடல் மணலை யன்படுத்தி கடலை நிரப்பியதன் மூலம் துறைமுக நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 269 ஹெக்டர் நிலப்பரப்பு இலங்கையின் நிலப்பரப்புடன் ஒன்றிணைக்கப்ட்டுள்ளது. அதன் பாதை பொது நிறுவனங்களைக்கொண்ட 91 கிலோ மீற்றர் நீளத்தினாலான இரண்டு கரையோரம் முக்கிய பூங்காவொன்றும் வருடத்தின் எந்தக்காலப்பகுதியிலும் நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுக்கான கடலோரம் மற்றும் நகரத்தின் ஊடாக 70 மீற்றர் அகலத்தைக் கொண்ட கால்வாய்யொன்று அமைக்கப்படும். இதே போன்று உணவகங்கள் மற்றும் பொழுது போக்கு வசதிகளைக் கொண்ட ஓய்வு நிலையம் களியாட்டப் பூங்கா சர்வதேச கல்வி சர்வதேச சுகாதார சேவை மற்றும் மகாநாட்டு மண்டபம் முதலானவற்றை இந்த பிரதேசம் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் தேசிய பொருளாதாரத்திற்கு உன்னதமான பங்களிப்பை வழங்கவுள்ள கொழும்புத் துறைமுக நகரம் கொழும்பு மாவட்டத்திலும் மேல்மாகாணத்திலும் உள்ள அரசாங்க இடமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த பிரதேசத்தை முகாமைத்துவம் செய்தல் மற்றும் முன்னெடுப்பதற்காக தேவையான அதிகாரத்தைக் கொண்ட சொத்துக்கள் முகாமைத்து முறை ஒன்றை அமைப்பதற்கு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிரு;ததி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஊர்நுஊ போட் சிட்டி கழம்பு நிறுவனம் சீன அபிவிருத்தி நிறுவனத்திற்கும் இடையில் உடன்பாட்டை எட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 46ஆவது விடயம்)
கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டத்தி;காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்ச நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஊர்நுஊ போட் சிட்டி கழம்பு தனியார் நிறுவனத்திற்கு இடையில் முத்தரப்பு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தடப்பட்டுள்ளது அதன் விதிகளுக்கு அமைவாக இலங்கை அரசாங்கத்தினால் போர்ட் சிட்டி கழம்பு நிறுவனத்திற்கு கடனாளியுடன் உடன்படிக்கையை எட்டுவதற்காக தேவையான உதவியை வழங்க வேண்டும். ஊர்நுஊபோட் சி;டடி கழம்பு தனியார் நிறுவனத்தினால்; திட்டத்தில் அபிவிருத்தி பணிகளுக்காக சீன அபிவிருத்தி வங்கியினால் நீண்ட கால கடன் வசதி உதவி பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எட்டப்பட வேண்டிய கடன் உடன்படிக்கைக்கு சீன அபிவிருத்தி வங்கி மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் திட்ட நிறுவனத்துக்கும் இடையில் உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12 .இலங்கை தேயிலை ஆய்வு நிறுவனம் மற்றும் அமெரிக்க மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தற்கு இடையில் உடன்படிக்கையை மேற்கொள்ளுதல்(நிகழ்ச்சி நிரலில் 48ஆவது விடயம்)
தேயிலைத்துறை தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை பல்வேறு பிரிவிகளின் ஊடாக மதிப்பிடுதல் மனித வள குறைப்பாட்டை தவிர்த்துக் கொள்ளல் மற்றும் மனித வள செயல்திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இலங்கை தேயிலை ஆய்வு நிறுவனம் மற்றம் அமெரிக்காவின் மிச்சி;கன் மாநில பல்கலைக்கழகத்திற்கு இடையில் கல்வி புரிந்துணர்வு தொடர்பில் உடன்படிக்கை ஒன்றை கைச்சாதிடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருதரப்பினருக்கு இடையில் கற்பித்தல், ஆய்வுகளை மேற்கொள்ளல் தொழில்களை விரிவுபடுத்தல் ஆகிய செயற்பாடுகளை இலகுபடுத்துதல் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்படும் .இதற்கமைவாக சம்பந்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக பெருந்தோட்ட தொழி;ற்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியள்ளது.
13. கல்பிட்டிகல நீர்த்தேக்கத்தின் மொத்த செலவீட்டு மதிப்பீட்டை திருத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 51ஆவது விடயம்)
கல்பிட்டிகல நீர்பாசனத் திட்டம் சீனாவின் எக்சின் வங்கியின் நிதியுதவியின் கீழ் சீனாவின் வரையறுக்கப்பட்ட சீனோ ஐட்ரோ நிறுவனத்தின் மூலம் 174 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு மொத்த தொகையின் கீழ் நிர்மாணிப்பதற்காக அமைச்சரவையினால் இதற்க முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கான வரி செலவு சுற்றாடல் அபிவிருத்தி பணிகள் காணிகளைப்; பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இழப்பீடு செலுத்துதல் மீள்குடியமர்த்தல், அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தல் போன்ற பணிகளுக்காக மேலும் 7227 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக மேலதிக நிதி உள்ளடக்கிய திட்டமொன்றுக்கு மொத்த செலவு மதிப்பீடு 174 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் தேசிய ஒதுக்கீட்டுக்காக தொகையை 7227 மில்லியன் ரூபாவாக திருத்துவதற்கும் அதற்கு மேலதிகமாக மதிப்Pட்டு செலவிற்கான நிதியுதவியை 2019 -2023 ஆண்டு வரையில் திறைசேறியில் ஒதுக்கீடு செய்வதற்காக விவசாய காணி பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்;ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. காலநிலை மாற்றத்தினாலான விளைவை குறைப்பதற்கான வேலைத்திட்டம் (நிழ்ச்சி நிரலில் 52ஆவது விடயம்)
காலநிலை மாற்றத்தினாலான விளைவின் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் அனர்த்தத்தை குறைப்பதற்காக மகாவலி ,களனி ,மல்வத்து ஜின் நிலவளா ,அதனகலு ,முந்தெனிய ஆறு முகத்துவார பகுதி போன்று கலாஓய எதுருஓய மாஓய மற்றும் கல்ஓய இறங்கு துறையை உள்ளடக்கும் வகையில் காலநிலையை தாக்கத்தை குறைக்கும் பன்முக திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 8 தொடக்கம் 10 வருடங்களுக்கிடையிலான காலப்பகுதியில் 3 கட்டங்களின் கீழ் 790 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுன் நீர்பாசனத்திணைக்களத்தின் மூலம் செயல்படுத்துவதற்காக விவசாயம் கிராமிய அபிவிருத்தி பணிகள் கால்நடை அபிவிருத்தி கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி ஹெரிசன் அவர்களும் அரச நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாhரம் வழங்கியுள்ளது.
15. பெர வேவ வாவிக்கருகாமையில் அபிவிருத்தி பிரதேசத்தில் மாடிவீட்டு கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 56ஆவது விடயம்)
பேரவௌ வாவிக்கருகாமையில் உள்ள பிரதேசத்தை வர்த்தக நகரமாக தரமுயர்த்தி அந்த பிரதேசத்தில் தொழில் வாய்ப்புகக்களை ஏற்படுத்துவதற்கும் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையிலும் வீடமைப்பு வாகனத்தரிப்பு அலுவலகம் மற்றும் கடைகள் உடன் முறையாக அபிவிருத்தி செய்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்ட ரீதியில் பேரவௌ வாவிக்கருகாமையில் அடையாளங் காணப்பட்டுள்ள 83 பேர்ச் காணியில் மாடி வீட்டு கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்காக அந்த காணியை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு உட்படுத்துவதற்கும் உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஏனைய வசதிகளை செய்வதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. தேசிய கட்டிட குறியீட்டை முறைப்படுத்துதல் (நிகழ்ச்சிநிரலில் 59ஆவது விடயம்
கட்டிடங்கள் உடைந்து விழுதல், தீப்பிடித்தல் மற்றும் இயற்கை அனர்த்தத்தின் காரணமாக கட்டிடங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு போன்றவை அதிகரிக்கும் தன்மை சமீப காலம் தொடக்கம் இலங்கையில் இடம்பெவது கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் பெரும்பானவற்றிற்கு காரணம் கட்டிட நிர்மாணத்தின் போது பொறியியல் நடைமுறைகளை கடைபிடிக்காமை மற்றும் பொருத்தமற்றவர்கள் நிர்மாணப் பணியில் பயன்படுத்தப்படுகின்றமை என்பவை தெரியவந்துள்ளது. அத்தோடு பாதுகாப்பற்ற கட்டிடங்களை அடையாளங் காணுதல் அவ்வாறான கட்டிடங்களின் தன்மையை மதிப்பீடு செய்யும் முறை ஒழுங்குருத்தும் பொறிமுறையொன்று இலங்கையில் இல்லாமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்களை திட்டமிடுதல் நிர்மாணித்தல் மாற்றுதல் மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகிய பணிகளை கட்டுப்படுத்துவதற்கான தொடர் விதிகள் என்ற ரீதியில் தேசய கட்டிடத் தொகுதி டீரடைனiபெ ஒழுங்குபடுத்துவதன் தேவையை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட தரப்பின் ஒத்துழைப்புடன் இலங்கையில் கட்டிடத் தொகுதியை நிர்மாணிக்கும் பிரிவுக்காக தேசிய கட்டிடத் தொகுதி . குறியீட்டை வகுப்பதற்காக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களும் அரச நிர்வாகம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. நிர்மாணத் தொழிற்துறை சபை திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 60ஆவது விடயம்)
இலங்கை நிர்மாண தொழிற்துறை சபை 2001ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதுடன் அதன் பின்னர் 2003ஆம் ஆண்டில் எபயன் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக அமைக்கப்பட்டது. தற்பொழுது தொழில் நிறுவனம் மற்றும் 12 நிறுவனங்கள் இந்த சபையின் அங்கத்தவர்களாவதுடன், சுமார் 300 தனியார் நிறுவனங்கள் இந்த சபை மற்றும் நேரடியாக தொடர்புபட்டுள்ளன. இலங்கையின் நிர்மாண தொழிற்துறை சபை (கூட்டுத்தாபனமாக அமைத்தல்) திருத்த சட்டமூலம் தனிநபர் சட்டத்திருத்தமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் இதன் பின்னர் இது தொடர்பில் நிர்மாணத் தொழிற்துறையுடன் தொடர்புபட்ட தரப்பினரின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்ட்டுள்ள திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. சிறுவர் மற்றும் இளைஞர்களை வரையறை செய்வதற்கான சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 63ஆவது விடயம்)
இலங்கையில் பல்வேறு சட்டங்களின் மூலம் சிறுவர் மற்றும் இளைஞர்களைவரையறை செய்வதற்கான பல்வேறு அர்த்தப்படுத்தல் இடம்பெறுவதினால் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு சிறுவர் என்ற வயது 18 வயதிற்கு குறைந்த நபர்கள் வரையறை செய்வதற்கானசிறுவர் மற்றும் இளைஞர் தொடர்பில் கட்டளை திருத்தத்தை மேற்nhள்வதற்கு இளைஞர் என்பது 18 வயதிற்கும் 22 வயதிற்கு உட்டபட்ட நபர்களாகவரையறை செய்வதற்காக இளைஞர் தவறுவிளைவித்தோர் (பயிற்சி பாடசாலை) தொடர்பான கட்டளை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் திருமதி தலதா அத்துகோரளை அவர்கள் சமர்ப்பித் ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. மும்மொழி கல்வியுடனான கலப்பு பாடசாலை ஒன்றை மீரிகம பிரதேசத்தில் அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 64ஆவது விடயம்)
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கம்பஹாவை அண்டிய பிரதேசத்தில் வாழும் பிள்ளைகளுக்காக தரமான கல்விக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய பாடசாலையொன்றை மினுவாங்கொடை தன்சலவத்தை என்ற காணியில் 20ஏக்கர் நிலப்பரப்பில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச பாடசாலை தரம் 1இற்கு அமைவாக 6 வகுப்புகளை கொண்டதாக மும்மொழி கல்வியை கற்கக் கூடிய பாடசாலையாக அமைப்பதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. பாடசாலைகளுக்கு கனணி வசதிகளை செய்துகொடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 65ஆவது விடயம்)
பாடசாலைகளில் கற்பித்தலுக்கான கல்வி நடவடிக்கைகளை வலுவூட்டும் நோக்கில் வரவு செலவு திட்ட முன்மொழிவுக்கு அமைவாக பாடசாலைளுக்கு கனணி வசதிகளை வழங்கும் திட்மொன்றை நடைமுறைப்படுத்தவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இரண்டாம் தரத்தைக் கொண்ட பாடசாலைகளுக்கு தேவையான கனணிகளை வழங்குவதற்காக 1,60000 மடிக்கணணிகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகுhரம் வழங்கியு;ளது.
21. வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான களஞ்சிய கட்டிடத் தொகுதியொன்றை தமபுள்ளையில் நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில70ஆவது)
அறுவடை விவசாய உற்பத்திகளை களஞ்சியப்படுத்தக்கூடிய 30 கூடங்களைக் கொண்ட 5000 மெற்றிக்தொன் வலுவைக்கொண்ட வெப்பத்தைக்கட்டுப்படுத்தும் களஞ்சிய கட்டிடத்தொகுதியொன்றை தம்புள்ளையில் நிர்மாணிப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கான நிதியில் 300 மில்லியன் ரூபாஇந்திய அரசாங்கத்தின் நிதியில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் நிர்மாணத்துக்கான ஒப்பந்தத்தை ஆஃளு ளுயுறு நுபெiநெநசiபெ (Pஎவ) டுவனஎன்ற நிறுவனத்திடம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட வர்த்தகத்திடம் வழங்க உள்ளதுடன் களஞ்சிய கட்டிடத் தொகுதியில் மேலும் மேற்கொள்ள வேண்டிய நிர்மாணப் பணிகளை 225மில்லியன் ரூபாவை மேலே கூறப்பட்ட ஒப்பந்தக்காரர் மூலம் மேற்கொள்ளுதல் மற்றும் அதற்காக தேவையான ஏனைய வசதிகளை செய்துகொள்வதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற பொருளாதார அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு பொதுவசதிகள்அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக அதிமேகு மைத்திரபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியள்ளது.
22. ஊவ வெல்லச பல்கலைக்கழகம் மற்றும் ருஹுனு பல்கலை;ககழகத்தில் மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 78ஆவது விடயம்)
ஊவ வெல்லச பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யம் திட்டத்தின் 2ஆம் கட்டத்தின் கீழ் நூலக கட்டிடத் தொகுதியை நிர்மாணிக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் 384.2 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட டெரின்டன் கன்ஸ்ரக்ஷன் தனியார் நிறவனத்திற்கும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்திற்கான தளபாடங்களுடனான 2மாடி விரிவுரை மண்டப கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான திட்டம் 337.8 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திற்கும் ருஹுனு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கடல்கல்வி மற்றும் சமுத்திரகல்வி மற்றும் கடல்நடவடிக்கைகளுக்கான உபகரணங்களுடனான தெற்கு மத்திய நிலையத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் 436.3 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திற்கும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய வழங்குவதற்காக நகரதிட்டமிடல் மற்றும் நீர்விநியோக மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. மன்னார் மற்றும் நாவலப்பிட்டி உயர்தொழில்நுட்ப நிறுவனங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில 79 ஆவது விடயம்)
நாவலப்பிட்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் 3 கற்கை நெறிகளுக்காக 119 மாணவர்களும் மன்னார் உயர்தொழில்நுட்ப நிறுவனத்தில் 4 கற்கைநெறிகளுக்காக 501 மாணவர்களும் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு மிகவும் சிறந்த கல்வி சூழல் மற்றும் போதுமான கல்வி அடிப்படை வசதிகளை நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச திட்டத்திற்காக 1208 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக நகரதிட்டமிடல் மற்றும் நீர்விநியோக மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. கேகாலை மாவட்ட செயலகத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டத் தொகுதியின் பணிகளை பூர்த்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 83ஆவது விடயம்)
கேகாலை மாவட்ட செயலகத்திற்காக புதிய கட்டிடமொன்றை நிர்மணிப்பதற்கென அமைச்சரவையினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த அனுமதிக்கு அமைவாக நிர்மாணப்பணிகள் அரம்பி;கபட்டதுடன் குறிப்பி;ட நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்தல் கட்டிடத் தொதியை பயன்படுத்துவதற்காக மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய உபகரணங்களை பொருத்தும் உணிகளை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் மூலம் மேற்கொள்வதற்காக உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுளள்ளது.
25. ஜா ஹெல பிரதேச செயலாளர் அலுவலகத்திற்காக புதிய 5 மாடி கட்டடிடத் தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 84ஆவது விடயம்)
57 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வாழும் 218000 மேற்பட்ட பொதுமக்களுக்கு சேவையை வழங்கும் ஜா ஹெல பிரதேச செயலகத்திற்காக 167.9மில்லியன் ரூபா செலவில் புதிய பிரதேச செயலக கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீககாரம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினம் இந்த கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணியின் போது அடையாளங் காணப்பட்ட ஆரம்ப மதிப்பீட்டுக்குள் உள்ளடக்கப்படாத அத்தியாவசிய நிர்மாணத்தைப்போன்று விலை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக திட்டத்தின் மொத்த செலவு மதிப்பீடு 190.7 மில்லியன் ரூபா வரையில் அதிகரித்தமை மற்றும் அதற்கமைவாக தேவையான ஏனைய வசதிகளை செய்வதற்காக உள்ளக உள்நாட்டலுவல்கள அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுளள்ளது.
26. கல்பிட்டிகல நீர்த்திட்டத்திற்காக ஆலோசனை சேவையை பெற்றுக்கொள்ளுதல் (நிகழச்சி நிரலில் 85ஆவது விடயம்)
உமாஓயா பன்முக அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமையினால் அதன்கீழ் அமைந்துள்ள பக்மெடில்ல அருகாமையிலும் மினிப்பே வலது புறத்தில் திட்டத்திற்காக ஏற்படக்கூடிய நீர்த்தட்டுப்பாட்டிற்கு மாற்றீடாக கல்பிட்டிகல நீர்த்தேக்க திட்டம் நடைமுறைப்படுத்தவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டட ஆலோசனை மிக்க கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கமைய இந்த திட்டத்தின் ஆலோசனை ஒப்பந்தம் 333 மில்லியன் ரூபாவிற்கு பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை அலுவத்திடம் வழங்குவதற்கும் அதற்கான ஏனைய வசதிகளை செய்வதற்கும் விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அவர்கள் சமர்ப்பித் ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27. இலஞ்சம் அல்லது ஊழலை இல்லாதொழிப்பதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 90ஆவது விடயம்)
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டை விசாரணை செய்யும் சட்டம் அதனுடன் தொடர்புபட்ட சட்டத்தில் திருத்;தத்;தை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்ட்டது. இதற்கமைவாக இலஞ்சம் சட்டத்தின் 70ஆவது சரத்தை திருத்தி 2018ஆம் ஆண்டு இல 22 கீழான இலஞ்சம் (திருத்தம்) சட்டமாகவும் விசாரணை ஆணைக்கழு மற்றும் சட்டத்தை திருத்தத்தை மேற்கொண்டு அதனை 2019ஆம் ஆண்டு 3 கீழான விசாரணை ஆணைக்கழு (திருத்தம்) சட்டமாகவும் தற்பொழுது சட்டமாக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இலஞ்சம் அல்லது ஊழல் நடவடிக்கையை இல்லாதொழிப்பதற்காக மேலும் திருத்த சட்டமூலத்தை மேற்கொள்ளப்படவுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டை விசாரணை செய்யும் ஆணைககுழுவின் புதிய சட்டம் இலஞ்சம் சட்டத்திற்கான திருத்த சட்டம் மற்றும் சொத்துக்களை பிரகடனப்படுத்தம் சட்டத்திற்கான திருத்த சட்டம் ஆகிய சட்டங்களுக்காக திருத்த சட்டமொன்றை வகுப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்தி;ற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
28. தனியார்துறை ஊழியர்களின் ஆகக்கூடிய சம்பளத்தை அதிகரித்தல் (நிகழ்ச்சி நிரலில் 95ஆவது விடயம்)
2016ஆம் ஆண்டு இல 3இன் கீழான ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பள சட்டத்தின் கீழ் 2016ஆம்ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் ரூபா.10000மற்றும் ஆகக்குறைந்த நாளாந்த சம்பளம் 400 ரூபாவாக இருக்கவேண்டும் என நிர்ணயிக்கபட்டிருந்தது. தற்போது நிலவும் வாழ்க்கை செலவுக்கு பொருத்தமான வகையில் தனியார் துறையில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 12500 ரூபாவாகவும் ஆகக் குறைந்த நாளாந்த கொடுப்பனவு 500 ரூபாவாகவும் இருக்க வேண்டும் என தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை சிபாரிசு செய்துள்ளது. இந்த சிபாரிசை கவனத்தில் கொண்டு தனியார்துறையில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 2016ஆம் ஆண்டு இல. 3யின் கீழான ஊழியர்களின ஆகக்குறைந்த சம்பள சட்டத்தில் திருத்ததை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அந்தஸ்த்;து அற்ற தொழில் மற்றும் தொழில்சங்க அமைச்சரின் கோரிக்கைக்குஅமைவாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்தி;ற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
29. இலங்கை மத்திய வங்கியின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 96ஆவத விடயம்)
இலங்கையின் பொருளாதார நிலைமை இலங்கை மத்திய வங்கியின் நிலைமை மற்றும் சம்பந்தப்பட்ட வருடத்தில் கடைபிடிக்கப்பட்ட நிதிக்கொள்கை மற்றும் நடைமுறை தொடர்பான தகவல்களை உள்ளடக்கி நிதி . நீதி சட்டத்தின் ஒழுங்க விதிகளுக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் நிதி சபையினால் இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி , நீதி சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக நிதி விடயத்திற்கு பொறுப்பு அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக பதில் நிதியமைச்சர் இரான் விக்ரமரட்ன அவர்களினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியள்ளது.
30. விமானப் பயணிகளின் பாதூப்பை உறுதிசெய்தல் (நிகழ்ச்சி நிரலில 97ஆவது விpடயம்)
சமீபத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் போன்ற பயங்கரவாத நடவடிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய பயங்கரவாத நடவடிக்கையை எதிர்காலத்தில் இடம்பெறுவதை தடுக்கும்நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி விமான சேவையைப் பெற்றக்கொள்ளும்; பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு தேவையான துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதில் ஒரு நடவடிக்கையாக பயணிகளின் பயணப்பொதி மற்றும் பொருட்களை பரிசோதனை செய்வதற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களை கொள்வனவு செய்து பொருத்துவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
31. சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 98ஆவது விடயம்)
சமீபத்திய உயிர்தெழுந்த ஞாயிறு தினத்தன்று நிகழ்ந்த துர்பாக்கிய சம்பவத்தின் காரணமாக சுற்றுலா துறை எதிர்கnhண்டுள்ள நிலைமையை தவிர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சரின் தலைமையின் கீழும் மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் 5 அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.