சாய்ந்தமருதிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 3மீனவர்கள் கரை திரும்பினர்.

எம்.என்.எம்.அப்ராஸ், யூ கே .காலிதீன்-

சாய்ந்தமருது நடுத்துறை கடற்கரையிலிருந்து
கடந்த (26) ஆழ் கடல் இயந்திர படகு மூலம் மீன்பிடிக்க சென்று காணாமல்போன மீனவர்கள் 3 நாட்களின் பின்னர் கரையை வந்தடைந்தனர்.
இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் இவர்களை
தேடிச் சென்ற ஏனைய மீனவர்களினால் இன்று(29) பொத்துவில் கடற்ப்பரப்பில் சுமார் 15மணிநேர தூரத்திலுள்ள பொத்தான பிரதேச எல்லைக்குள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
குறித்த மீனவர்காளான எம்.எம். அமீர் அலி, எம்.அன்சார் , எம்.எஸ்.நாஸர் மீனவர்கள் மூவரும்,மீன்பிடிக்கச் சென்றனர் இவர்கள் மறுநாள் காலை கரை திரும்புவது வழமையாகும். ஆனால் அன்றைய தினம் அவர்கள் கரை திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை தேடும் பணியில் ,ஈடுபட்டு உதவிய அனைவருக்கும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் சங்கத்தின் தலைவர் ஏ.ஹமீட் (நஸீர்) தனது நன்றியினை தெரிவித்தார்
மேலும் இன்றைய தினம்(29) மீனவர்களின் வருகையை முன்னிட்டு விசேட துஆப் பிராத்தனையும் இப்தார் நிகழ்வும்
சாய்ந்தமருது நடுத்துறை ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது, கடற்கரை வீதி அல்-ஹஸனாத் பள்ளிவாசலின் பின்பாகவுள்ள கடற்கரை திடலில் ஆழ்கடல் மீனவ
இயந்திர படகு சமாஜத்தின் தலைவர் ஏ.ஏ. றஹிம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா, ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர் எம்.எம்.சலீம் (சர்க்கி), வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ். முபாரக், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -