சுமார் 4000 பௌத்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த தெளஹீத் டாக்டர் யார்..

ன்றைய திவயின சகோதர மொழி பத்திரிகையில் வெளியாகியிருந்த “பௌத்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு” தொடர்பான செய்தியின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி இன்று பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளது.

தௌஹீத் அமைப்பைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர், சுமார் 4000 பௌத்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளதாக இன்றைய திவயின பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை குறித்த செய்தி தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைத் தொடர்புகொண்டு விபரம் கேட்டதாகவும், அவ்வாறு எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறியதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த செய்தி தொடர்பான உண்மைத் தன்மையை நாளையதினம் பாராளுமன்றில் முன்வைக்குமாறும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -