குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் உள்ள சில சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
குறித்த வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிருப்பதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பொலிஸ் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார்.
இதுதவிர, 14 மில்லியன் ரூபா பணத்தை தற்பொழுது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் தற்பொழுது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.