மட்டக்களப்பு மாவட்டத்தின் கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள 52 மத ஸ்தலங்களின் புனரமைப்பிற்காக கம்பெரலிய திட்டத்தின்கீழ் இரண்டு கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
சர்வ மத பெரியார்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களும் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.
சர்வ மத அனுஷ்டானத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்போது பௌத்த விகாரைகள் , இந்துக்கோயில்கள் , கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாயல்கள் என 45 மத ஸ்தலங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.