ஆலயடிவேம்பில் 5.5 மில்லியன் நிதியில் நிர்மானிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தக திறப்பு விழா


பைஷல் இஸ்மாயில் -
க்கரைப்பற்று, ஆலயடிவேம்பு பிரதேசத்தில் 5.5 மில்லியன் நிதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் புதிய கட்டட திறப்பு விழாவும், அதனை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டு குறித்த ஆயர்வேத மத்திய மருந்தகத்தை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கும் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வுக்கு சுகாதார, சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் கௌரவ அதிதிகளாகவும், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், ஆளுநர் செயலக செயலாளர் அசங்க அவேவர்த்தன, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன், கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளர் எம்.ஏ.நபில், சுதேச திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், ஆலயடிவேம்பு பிரதேச செயலக செயலாளர் மற்றும் தவிசாளர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் அம்பாறை மாவட்டத்தில் எல்லா பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும், அதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 5 இடங்களில் முதியோர் கிளினிக் திட்டம், தாய் சேய் போசனை திட்டம், போதைத் தடுப்பு திட்டம் போன்ற 3 திட்டங்கள் முன்னெடுத்து வருவதாவும் இந்தத் திட்டங்களை அம்பாறை, அக்கரைப்பற்று, திருக்கோவில், உஹண, தமண போன்ற பிரதேசகளில் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -