கிழக்கில் 8மணிக்கு பாடசாலைகள் தொடங்க நான் யாருக்கும் அனுமதிவழங்கவில்லை!


கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் மறுக்கிறார்!
காரைதீவு நிருபர் சகா-
பாடசாலைகள் தொடங்கும் நேரம் முடிவடையும் நேரம் மத்திய நிரல்அமைச்சின் நிகழ்ச்சிநிரலோடு சம்பந்தப்பட்டது. கொள்கைரீதியிலான நடைமுறை அப்படியிருக்க கிழக்கில் பாடசாலைகள் 8மணிக்கு ஆரம்பிக்க எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அப்படி நான் யாருக்கும் அனுமதி வழங்கவுமில்லை.
இவ்வாறு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
கிழக்கில் 8மணிக்கு பாடசாலைகள் தொடங்க நான் அனுமதியளித்ததாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. நான் அவ்வாறு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்பதையும் அச்செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அச்செய்தியைப்பார்த்துவிட்டு பலரும் வினவுகின்றனர். பிழையானதொரு கருத்தை அந்ததலைப்பு வழங்கியுள்ளதாகக்கருதுகிறேன்.அதனால் உயரதிகாரிகள் பாதுகாப்புத்துறையினர் தொடக்கம் அதிபர்கள் வரை குழப்பத்துடன் என்னைக்கேட்கின்றனர். நான் அப்படி ஒரு உத்தரவை யாருக்கும் வழங்கவில்லை எனக்கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:
பொதுவாக பாடசாலைகளில் சில விசேட நடைமுறைகள் உள்ளன. அப்பிரதேசத்து ஆலயத்திருவிழா அல்லது விசேடதினம் என்றால் முறைப்படி விண்ணப்பித்தால் விசேடலீவு வழங்கி அதற்கு பதில் பாடசாலை வைப்பதும் நடைமுறையிலுள்ளது.
இன்றைய அசாதாரணசூழ்நிலையில் ஏதாவதொரு பாடசாலையில் வெளியிலிருந்து பெரும்பாலான ஆசிரியர்கள் வருவதில் சிரமம் என்று கருதும் பட்சத்தில் மட்டும் அவர் குறித்த வலயக்கல்விப்பணிப்பாளருக்கு நியாயப்படுத்தல்களுடன் விண்ணப்பிக்கவேண்டும்.

அவர் அது நியாயமானது எனக்கருதி தீர்க்கமாக பரிந்துரைசெய்து எனக்கு அனுப்பிவைக்கவேண்;டும். அதனைப்பரிசீலனைசெய்தபிற்பாடே அவ்வாறு விசேட அனுமதி வழங்கப்படுமே தவிர விரும்பியமாதிரி 8மணிக்கு யாரும் பாடசாலைகளை ஆரம்பிக்கமுடியாது.
இன்றைய அசாதாரண சூழ்நிலையில் பாடசாலைகளை மிகவும் கவனமாகக்கையாளவேண்டும்.7மணிக்குமுன்னர் பாதுகாப்புச்சோதனை முடித்து மாணவர்களை 7.30க்கு முன்னரே உள்ளேஅனுமதிக்கவேண்டும். அவ்வாறு கல்வியமைச்சு கூறியிருக்கின்ற இந்தவேளையில் நேரம் பிந்தி ஆரம்பிப்பது என்பது மேலதிக பிரச்சினைகள் ஏற்படுவதுடன் பாதுகாப்பு சந்தேகத்தையும் ஏற்படுத்தவழிவகுக்கும். சோதனைச்சாவடி சோதனை போக்குவரத்துதாமதம் என்றால் வழமைக்கு மாறாக சற்று முந்தி புறப்பட்டு பாடசாலைக்குவருதல் பொருத்தமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -