தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த பாராளுமன்ற மொழிபெயர்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்

குருணாகல் விஷேட பொலிஸ் குழுவினால் நேற்று கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழிபெயர்பாளரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜமால் டி. ஜவ்ஷாட் எனும் குறித்த நபர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார்.

அதனடிப்படையில் குறித்த நபரை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நீண்ட கால உறுப்பினர் எனவும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பிரதான அறிவுரையாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த12 வருடங்களாக பாராளுமன்ற மொழிபெயர்பாளராக குறித்த சந்தேகநபர் கடையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.டைலிசிலோன்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -