ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஆடையும் அணியலாம். ஹிஜாபுக்கு தடையில்லை

நாச்சியாதீவு பர்வீன் -
நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையின் காரணமாக முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சையினால் முஸ்லிம் பெண்கள் அன்றாடம் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற பெற்ற தீவிரவாத தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னரே இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத வகையில் முஸ்லிம் பெண்களினால் முகத்தை மூடி அணியப்படுகின்ற புர்கா மற்றும் ஜில்பாப் ஆகிவற்றினை அணிந்து கொண்டு தீவிரவாத செயற்பாடுகளில் தீவிரவாதிகள் ஈடுபடுவதனை தடுக்கும் முகமாகவும், நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டும் அண்மையில் ஜனாதிபதியினால் இந்த வகையான ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.
முகத்தை திறந்த வகையில் அணிகின்ற எல்லாவகையான ஆடைகளுக்கும் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமது அன்றாட காரியங்களை கொண்டு நடத்துவதில் இந்த ஆடை தடை விவகாரம் முஸ்லிம் பெண்களுக்கு பலத்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. முகத்தை திறந்த வகையில், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் முஸ்லிம் பெண்களினால் அணியப்படுகின்ற "ஹிஜாப்" ஆடையை அணிந்து செல்கின்ற போதும் வைத்தியசாலை,வங்கி, அரச அலுவலகங்கள் போன்றவற்றில் அந்த ஆடையை கழட்டி விட்டு வருமாறு அவர்கள் பணிக்கப்படுவது தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்ற நிலையில் .
இன்று (02) வியாழக்கிழமை சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய கௌரவ இராஜாங்க பைசல் காசிம் அவர்களின் அமைச்சில் முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்சத் நிஸாம்தீன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் இராஜாங்க அமைச்சரை சந்தித்தனர். அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சரின் சகோதரர் ரவூப் ஹஸீர் இந்த சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.
நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக முஸ்லிம் பெண்கள் "ஹிஜாப்" அணிவதில் அன்றாடம் ஏற்பட்டுள்ள அசௌகரிய நிலைமை தொடர்பில் இங்கு பேசப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் பைசல் முஸ்தபாவும் தன்னிடம் கதைத்ததாக கூறிய இராஜாங்க அமைச்சர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஹிஜாப் தொடர்பிலான விளக்கத்தினை வெளியிடுமாறு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr அனில் ஜயசிங்க பணித்தார். அதற்கமைய வெளியிடப்பட்ட அறிக்கையும் உடனடியாக வெளியிடப்பட்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -