அகமட் எஸ். முகைடீன்-
முஸ்லிம் கல்வி, சமூக ஆய்வு நிறுவனத்தின் (மெஸ்ரோ) வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று (25) சனிக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அவ்வமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நசீல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபக தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், மெஸ்ரோ அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி ஏ.ஆர்.எம். சுல்பி, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறைத் தலைவரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபக உறுப்பினருமான கலாநிதி எம்.எம். பாசில் உள்ளிட்ட மெஸ்ரோ அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.