யாசகம் கேட்டுச் சென்ற வயோதிபப் பெண் டிப்பர் வாகனத்தில் மோதுண்டு பரிதாபமாகப் பலி


க.கிஷாந்தன்,எம் கிருஸ்ணா -ட்டன் கொழும்பு பிரதான வீதியின் அட்டன் நகரின் மக்கள் வங்கிக்கு அருகாமையில் கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் 24.05.2019 அன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் வீதியை கடக்க முயற்சித்த குறித்த வயோதிப பெண் பொகவந்தலாவ பகுதியில் இருந்து அட்டன் குடாகம பகுதிக்கு சென்ற கனரக வாகனத்தில் முன் சில்லில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.

பலியான குறித்த பெண் அட்டன் நகரில் யாசகர் தொழில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவந்துள்ளனது.
குறித்த வாகன சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், விபத்தின் தொடர்புடைய குறித்த சாரதியை கைது செய்துள்ளதாகவும், அவரை 24.05.2019 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை அட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -