மருதமுனை மக்கள் எப்போதும் சமாதானத்தையும், சகவாழ்வையும் விரும்புகின்றவர்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.

கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் தர்மசேன
பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனையிலே வாழுகின்ற மக்கள் எப்போதும் சமாதானத்தையும், சகவாழ்வையும் விரும்புகின்றவர்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.அந்த நம்பிக்கை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும் என கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் என்.ஆர்.தர்மசேன தெரிவித்தார்.
மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று(20-05-2019)திங்கள்கிழமை பள்ளிவாசல் தலைவர் டொக்டர் எஸ்.ஏ.ஆர்.எம்.எஸ்.மௌலானா தலைமையில் பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது இங்கு 24வது படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் மஹிந்த முதலிகேவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:- எமது 24வது படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் மஹிந்த முதலிகே அவர்கள் தான் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்தார் அவசர கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொள்ளச் சென்றதால் அவரின் பிரதிநிதியாக என்னைக் கலந்து கொள்ளுமாறு பணித்திருந்தார் அவரின் பிரதிநிதியாகவே நான் கலந்து கொண்டிருக்கின்றேன்.
பொது நிகழ்வுகளுக்கு இரானுவத்தினரை அழைப்பதன் மூலம் சமய நிறுவனங்களுக்கும்,பொதுமக்களுக்குமிடையிலான தூரம் மிக நெருக்கமாகிவிடும் இதன் மூலம் ஏனைய சமய கலாச்சரா மற்றும் வாழ்வியல் முறைகளையும் நாங்கள் நன்கு அறிந்து கொள்ள முடியும்.அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும்,சமாதானமாகவும் வாழ்ந்து இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப வேண்டும் இதன் மூலமே நாங்கள் சந்தோஷமாக வாழ முடியும் என்றார்.

இந்த நிகழ்வில் அஷ்ஷெய்க் என்.ஜி.அப்துல் கமால் விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.இங்கு பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட்,ஊவா வெல்லஸ்சர பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல்,அம்பாறை மாவட்ட மேலதிகச் செயலாளர் எம்.ஏ.அப்துல் லத்திப்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் உள்ளீட்ட மருதமுனைப் பிரதேசப் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.அதிபர் ஏ.எம்.அன்சார் நிகழ்வை நெறிப்படுத்தி தொகுத்து வழங்கினார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -