இலங்கையில் குடும்பக்கட்டுப்பாடு நாமிருவர் நமக்கு மூவர் பிரேரணை நிறைவேற்றம்..!

போபே போத்தள பிரதேச சபைக் கூட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும் என பௌத்த பிக்குகள் பலரினால் போபே போத்தள பிரதேச சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்து அப்பிரதேச சபை உறுப்பினர் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட போது ஏகமனதாக சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காலி உப பிரதான சங்க சபைத் தலைவர் வீரபானே ஹேமாராம தேரர் உட்பட 14 தேரர்களினால் இந்த யோசனை சபை உறுப்பினர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை நேற்று (21) இடம்பெற்ற மாதாந்த சபைக் கூட்டத்தில் முன்வைத்த போதே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய மக்கள் தொகை நில அளவை விடவும் அதிகரித்துள்ளனர். இதனால், நாட்டிலுள்ள சகல இன மக்களும் தமது மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். இதற்காக வேண்டிய சட்டமொன்று நாட்டில் கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் இந்த யோசனையை முன்வைத்துள்ள தேரர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.

ஒரு குடும்பத்துக்கு மூன்று குழந்தைகள் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர். மனித மற்றும் பொருளாதார ரீதியான ஆய்வுகளின் அடிப்படையில் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் இதுபோன்ற தீர்மானங்களுக்கு வந்துள்ளதாகவும் இந்த யோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை காலத்தின் தேவையாக கருதி ஆளும் கட்சி, எதிர்க் கட்சி எனப் பாராமல் இலங்கை பாராளுமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் குறித்த தேரர்கள் அந்தப் பிரேரணையில் நியாயம் கூறியுள்ளதாகவும் இன்றைய தேசிய நாளிதழொன்று குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -