காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பூபாலரட்ணம் கோரிக்கை
எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க செயற்பாட்டாளர் ஒருவரையே இலங்கை இராணுவத்தின்அடுத்த தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்ஆறுமுகம் பூபாலரட்ணம் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவர் இதைதெரிவித்தார்.
இவர் இது குறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு
இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி எமக்கு உறவினரோஅல்லது தனிப்பட்ட நண்பரோ அல்லர். அவரை நான் நேரில் பார்த்ததுகூட கிடையாது. ஆயினும் அவர் யாழ். மாவட்டகட்டளை தளபதியாக இருந்து அம்மாவட்ட மக்களுக்கு ஆற்றி வருகின்ற சேவைகள் குறித்து அறிகின்றபோதெல்லாம் அவர்மீது எமக்கு மரியாதை, மதிப்பு ஆகியன அதிகரித்து கொண்டே செல்கின்றன.
யுத்தத்துக்கு பின்னர் யாழ். மாவட்ட மக்களின் மனங்களை வெல்கின்ற மனித நேய வேலை திட்டங்கள் பலவற்றையும்அவருடைய பதவி காலத்தில் முன்னெடுத்து வருகின்றார். யுத்த காலத்தில் இராணுவத்தால் யாழ். மாவட்ட மக்களுக்குஇழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பரிகாரங்களாகக்கூட அவை இருக்க கூடும்.
அரசியல்வாதிகளால் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொதுநல வேலை திட்டங்களை காட்டிலும்அவரால் முன்னெடுக்கப்படுகின்ற பொதுநல வேலை திட்டங்கள் பல மடங்குகள் ஏராளம் ஆகும். தென்னிலங்கையையும், புலம்பெயர் தேசங்களையும் சேர்ந்த மனித நேய செயற்பாட்டாளர்களிடம் இருந்து நிதி பங்களிப்புகளை பெற்றுஇம்மாவட்டத்தின் வறிய, வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை தரம், பொருளாதாரம்ஆகியவற்றை மேம்படுத்துகின்ற செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். இவருடைய காலத்தில் பொதுமக்களின்ஏராளமான காணிகள் விடுவித்து தரப்பட்டு உள்ளன. அதே போல கீரிமலையில் நல்லிணக்கபுரம் வீட்டு திட்டம் உருவாக்கிகொடுக்கப்பட்டு உள்ளது. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இவரின் வழிகாட்டல், அறிவுறுத்தல்ஆகியவற்றுக்கு அமைய யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற மனித நேய வேலை திட்டங்களை பார்வையிட்டுஇவருடைய சேவைகளை பாராட்டி இவருக்கு மகத்தான மனித நேய விருது வழங்கி கௌரவித்து உள்ளனர். நான் அறிந்தவரையில் எமது நாட்டில் ஊடகவியலாளர்கள் அமைப்பினால் மனித நேய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளஒரேயொரு இராணுவ உயரதிகாரி இவராகத்தான் இருக்க முடியும்.
வருகின்ற மாதம் அளவில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக புதியவர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டி உள்ளது. மனித நேயம், மனித உரிமை ஆகியன குறித்து அதிகம் முக்கியத்துவப்படுத்தப்படுகின்ற இக்கால கட்டத்தில் மேஜர் ஜெனரல்தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ற நல்லிணக்க செயற்பாட்டாளர் ஒருவரை ஜனாதிபதி புதிய தளபதியாக நியமித்தல்வேண்டும் என்பது எமது பேரவா ஆகும். இலங்கை இராணுவ தளபதியாக பதவி வகிப்பதற்கான அத்தனை தகுதிகள், தகைமைகள் ஆகியன மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு உள்ளன என்பதையும் இத்தருணத்தில் கூறிவைக்கின்றேன். யாழ். மாவட்ட மக்கள் தற்போது இவர் மூலமாக அனுபவித்து வருகின்ற நன்மைகள் நாட்டு மக்கள்அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது மாத்திரமே எமது எதிர்பார்ப்பு ஆகும்.