2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்விக் கல்லூரிகளில்கற்பித்தல் டிப்ளோமா பாடநெறிக்கான இரு குழுக்களையும் ஒரே தடவையில்இணைத்துக் கொள்வதற்காக கணிதம் மற்றும் இஸ்லாம் ஆகியபாடங்களுக்கான நேர்முகப்பரீட்சை 2019 ஜூன் மாதம் 17ம் திகதியிலிருந்துஅட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியில் இடம் பெறவுள்ளது.
நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பு கடிதங்கள் பதிவுத் தபால் மூலம் உரியவிண்ணப்பதாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இம்முறைஅட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரிக்கு இரண்டு தொகுதிகளிலும்இருந்து மொத்தமாக 05 பாடநெறிக்காக 350 ஆசிரிய பயிலுனர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின்பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தெரிவித்தார்