தொழிலாளர்கள் குளவி தாக்குதலில் உயிரிழப்பதற்கு தோட்ட வைத்தியசாலைகளை மூடியமேயே காரணம்.

குற்றம் சுமத்துகிறார் அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய சுதந்தர முன்னணயின் தேசிய அமைப்பாளருமான டொக்டர் கிசான் தெரிவித்தார்.
ஹட்டன் கே. சுந்தரலிங்கம்- 
வைத்திய துறைகள் இன்று பல வழிகளில் வளர்;ந்து வந்த போதிலும் இன்று தோட்டங்களில் சாதாரண ஒரு குளவி தாக்கி கூட தொழிலாயர்கள் உயிரிழக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்:டுள்ளது
இதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் இன்று தோட்டங்களில் முதலுதவி அளிப்பதற்கு கூட வைத்தியசாலைகள் இல்லை. இன்று தோட்டங்களில் இயங்கி வந்து சுமார் 163 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.இதன் காரணமாகவே குளவி தாக்குதல்களில் பலர் உயரிழந்துவருவதாக அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய சுதந்தர முன்னணயின் தேசிய அமைப்பாளருமான டொக்டர் கிசான் தெரிவித்தார்.
பொகவந்தலா டின்சின் தமிழ்; வித்தியாலயத்தில் குளவி கொட்டுதலில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பாகவும், குளவி தாக்குலுக்கு உள்ளானவர் முதலுதவி செய்வது தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று இன்று (26) நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..இன்று அரசாங்க வைத்தியசாலைகளை எடுத்து கொண்டால் சுமார் 9.00 மணிக்கு வேலைக்கு வந்து விட்டு 3.00 மணிக்கு சென்று விடுகிறார்கள் இதன் பயனை தொழிலாளர்கள் அதிகமான நேரங்களில் பெற முடியாத நிலையே காணப்படுகின்றது. ஆகவே தான் தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அந்த வைத்தியசாலையில் 24 மணி நேரமும் சேவையினை பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்குவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். எனவே தான் நாங்கள் மூடப்பட்ட வைத்தியசாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஆளுநர் ஊடாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதே நேரம் தோட்டங்களில் காணப்படும் குளவி கூடுகளை அகற்றுவதற்கு தோட்ட நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். அத்தோடு குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காக முடியாத வகையில் குளவிகள் தாக்குதல் அதிகமாக நடைபெறும் தோட்டங்களில் அவர்களுக்கென்று விசேட உடை ஒன்றினை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வைத்திய கே.ஆர் கிசான் அவர்களின் பிறந்த தினத்தினையொட்டி ஏழை குடும்பங்களுக்கு உடைகள்,மற்றும் சக்கர நாட்காலி,அத்துடன் 50 பாடசாலை மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன் இதன் போது கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கு டின்சின் பாடசாலையின் அதிபர்,;ஆசிரியர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -