அரசியலில் இனரீதியாக பிரிந்து செயலாற்றுவதை , பெரும்பாண்மை மக்களுக்குள் சிறுபாண்மையாக வாழும் முஸ்லிம் மக்கள் இனிமேல் மீள்பரிசீலனை செய்யவேண்டும்..!


எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை-

முன்பெல்லாம் பெரும்பாண்மை சிங்களவர்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம் மக்கள் அந்தப் பகுதியைச்சேர்ந்த சிங்கள உறுப்பினருக்கே வாக்களித்து வந்தார்கள். அதேநேரம் சிங்கள மக்களும் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வாக்களித்து வெற்றியடைய வைத்த வரலாறுகளும் உண்டு. சிங்கள பகுதிகளிலே சிறுபாண்மையினர்களாக வாழும் முஸ்லிம்கள் தேர்தல் காலங்களில் முஸ்லிம் உறுப்பினர்களுக்கே வாக்களிக்கவேண்டும் என்ற சிந்தனை எப்போது வந்ததோ அன்றே சிங்கள, முஸ்லிம் உறவுகளில் விரிசல் ஏற்பட ஆரம்பித்துவிட்டது எனலாம்.
முன்பெல்லாம் சிங்கள உறுப்பினர்களுக்கு வாக்களித்த முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினையென்றால் அந்த உறுப்பினர் கலத்திலே நின்று பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சிப்பார். காரணம் முஸ்லிம்களின் வாக்குகள் அவருக்கு தேவைப்படும் என்பதனாலாகும். தற்போதைய நிலையில் சிங்கள உறுப்பினர்கள் இப்படியான பிரச்சினைகள் வரும்போது முஸ்லிம்களைக் கண்டுகொள்ளுவதில்லை. அதற்கு காரணம் தேர்தல் காலங்களில் முஸ்லிம்களுடைய ஆதரவு தங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்பதனாலாகும்.
ஆகவே முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வந்தால் நீங்கள் வாக்களித்த உங்கட முஸ்லிம் உறுப்பினர்களிடமே உதவி கேட்டுக்கொள்ளுங்கள் என்ற மனப்பாங்கில் சிங்கள உறுப்பினர்கள் நடந்துகொள்கின்றார்கள். அந்த நேரம் முஸ்லிம்களின் உணர்ச்சிகளைத்தூண்டி வாக்குகளைக் கொள்ளையடித்துச் சென்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்படியான பிரச்சினைகள் வரும்போது "என்னை விட்டால் போதுண்டா சாமி" என்ற என்னத்தோடு ஏதோ ஒரு மூலையில் பதுங்கிகொண்டு இருப்பார்கள். பிரச்சினைகள் முடிந்ததன் பின் இப்போதுதான் தூங்கி எழுந்தவர்கள்போல் சேதங்களை பார்வையிட வருவார்கள். அதனை நம்பிய நம்மட முஸ்லிம்களும் கூட்டமாக சேர்ந்துகொண்டு அவர்களை வரவேற்று தங்களுக்கு நடந்த அநியாயங்களை அவர்களிடம் சொல்லிச் சொல்லிச் அழுவார்கள், அத்தோடு அந்தக் கதை முடிந்துவிடும்.
சிங்கள மக்கள் மத்தியிலே சிறுபாண்மையினர்களாக வசிக்கும் முஸ்லிம் மக்கள் தங்களுடைய மத விடயங்களில் மட்டும் தனியொரு சமூகமாக இனம்காட்டி வாழ்ந்தாலும், தேர்தல் காலங்களிலும் நாங்கள் தனி இனமாகவே சிந்திப்போம் என்று வாழ்ந்து வர என்னக்கூடாது. இப்படியான செயல்பாடுகள் சிங்கள முஸ்லிம் உறவுகளை விரிசலாக்குமேயொழிய ஒருகாலும் ஒற்றுமையைக் கொண்டுவராது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் இனவாத ரீதியில் அரசியல் செய்ய முற்பட்டபோது பதியதீன் முகமட், ஏ.சி.எஸ் கமீட், எம்.எச்.முகமட், எம்.சி.கலீல் போன்றவர்கள், இந்த இனரீதியான அரசியல் சிங்கள மக்கள் மத்தியிலே சிறுபாண்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு ஒத்துவராது, இப்படியான நடவடிக்கைகள் ஒருகாலத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமாக முடியும் என்றும் கூறிவைத்தார்கள். அவர்கள் அன்று அந்தக்கருத்தினைக் கூறும்போது அவர்கள் துரோகிகளாகவே பார்க்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. அதன் பலன்களை நாம் இன்று கண்டுவருகின்றோம்.
சுதந்திரம் கிடைத்ததன் பின்பு தமிழர்கள் எங்களுக்கு 50:50 உரிமை தரவேண்டும் என்று போராடத்துவங்கியபோது, அதற்கு ஆதரவு தெரிவிக்காத அன்றய முஸ்லிம் தலைவர்கள் சிங்கள மக்களோடுதான் நாங்கள் பயணிப்போம், அதுதான் எங்கள் இனத்துக்கு பாதுகாப்பானது என்று கூறியது மட்டுமல்ல, உங்களோடு சேர்ந்து நாங்களும் தனியாக கோசம் எழுப்ப துவங்கினால் உங்களைவிட எங்கள் சமூகமே அடிவாங்கும் என்பதனால் எங்களை விட்டுவிடுங்கள் என்று கூறிய வரலாறுகளும் உண்டு. இதே கொள்கையை கடைப்பிடித்த எங்கள் முன்னோர்கள் இனங்கிய அரசியலின் மூலம் 60 வீதம் லாபம் பெற்றாலும் 40வீதம் நஷ்டங்களை அடைந்தார்கள் என்பதை மறுப்பதற்கும் இல்லை. ஆனால் இன்று முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கே வாக்களிக்கவேண்டும் என்று எப்போது தீர்மானித்தார்களோ அன்றிலிருந்தே 100வீதமான அநியாயங்களைத்தான் சந்தித்து வருகின்றார்கள் என்பதை இப்போது நாம் கண்ணாரா கண்டுவருகின்றோம்.
ஆகவே சிங்கள மக்கள் மத்தியிலே வசிக்கும் முஸ்லிம் மக்கள் கலை கலாச்சார மார்க்கவிடயங்களில் தனித்துவத்தை பேணிவந்தாலும், அரசியல் ரீதியில் பிரிவிணையைக் காட்டாமல் பெறும்பாண்மை சிங்கள அரசியல்வாதிகளின் அன்பைப் பெற்று வாழ்ந்துவந்தால் நிச்சயமாக இப்படியான பிரச்சினைகளில் இருந்து தீர்வை ஓரளவு பெறலாம் என்பதே எங்களின் கருத்தாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -