கிண்ணியாவில் இரானுவ உயரதிகாரிகளுடனான கலந்துரையாடல்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
ரானுவ உயரதிகாரிகளுக்கும் கிண்ணியா பொது மக்களுக்கும் இடையிலான விசேட பாதுகாப்பு தொடர்பான சந்திப்பு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது நேற்று (08) புதன் கிழமை கிண்ணியா உலமா சபையின் ஏற்பாட்டின் கீழ் கிண்ணியா மஸ்ஜிதுல் ஹைர் ஜூம்ஆ பள்ளியில் இடம் பெற்றது.
அண்மையில் இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து முஸ்லிம்களுடைய பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் இரானுவ உயரதிகாரிகளால் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து செயற்படுமாறும் அவசர கால சட்டம் தொடர்பாகவும் கூறப்பட்டதுடன் தீவிரவாதிகளை ஒரு போதும் நாட்டுக்குள் இருப்பதை அனுமதிக்க முடியாது எனவும் இரானுவ உயரதிகாரியான பிரிகேடியர் அஸாட் இஸ்ஸதீன் இதன் போது தெரிவித்தார்.

பாதுகாப்பு நடவடிக்கை கருதி சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது மக்கள் படையினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் மேலும் தெரிவித்தார்.

பொது மக்கள் சார்பாகவும் பல கருத்துக்களை இரானுவ உயரதிகாரிகளிடத்தில் தெரிவிக்கப்பட்டது.

கிண்ணியா அண்ணல்நகரில் அமைக்கப்பட்ட இரானுவ முகாமை எல்லைப் புறத்துக்கு மாற்றுமாறும் தேவையற்ற விதத்தில் கைதுகள் மேற்கொண்டு கண்களை கட்டிக் கொண்டு செல்வதையும் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை பொது மக்கள் மேலும் முன்வைத்தார்கள்ஃ

குறித்த கலந்துரையாடலில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி, கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி , இரானுவ உயரதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், சமூக நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -