உள்ளூர் சுற்றுலாத்துறையையும் அச்சகரமான சூழல் வெகுவாகப் பாதித்துள்ளது.


தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக உள்ளூரில் காணப்படும் சுற்றுலாத்துறையும் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுதால் அவற்றிற்கு தொழிற் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவி வரும் தாக்குதல்கள் தொடர்பான அச்சத்தின் நிமிர்த்தமாக உள்நாட்டில் காணப்படும் சுற்றுலாத்துறை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ளூராட்சி அமைப்புக்களின் கீழ் கேள்விக்கோரல் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சுற்றுலா பிரதேசங்களின் வருமானங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எமது சபையான வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட சுற்றுலா இடங்களுக்குக் கூட அச்சத்தின் நிமிர்த்தமாக சுற்றுலாதாரிகளின் வருகை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எமது சபைக்குட்பட்ட நிலாவரை கிணற்றினைப் பார்வையிடுவதற்காக தினமும் பெருந்தொகை சுற்றுலாப்பயணிகள் வருகை தந்த போதும் தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதில்லை. இதனால் உள்ளூரில் பிரதேச சபைகளிடம் இருந்து கேள்வி அடிப்படையில் சுற்றுலா மையங்களைப் பெற்று நிர்வகிப்பவர்கள் தொழில் ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களின் பிரகாரமும் செய்திகளின் அடிப்படையிலும் மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளன.
ஏற்கனவே தேசிய அளவில் சுற்றுலாத்துறை பெரும் வருமானத்திற்கு உரியதாக இருந்தபோதும் தற்போதே வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்கள் தொழில் நாட்டம் பெற்றுள்ளது. அந் நிலைமைகள் இடையே தற்போது ஏற்பட்டுள்ள இடர் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களில் இருந்து கேள்விக்கோரளின் அடிப்படையில் இலட்சக்கணக்கான பணத்திற்கு கேள்விகளைப்பெற்றோர் எமது சபைகளிடம் தமது வருமானமற்ற இக்கட்டாண நிலைமைகளை தெரியப்படுத்தி வருகின்றனர். நாமும் எடுக்கக் கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம். மேலும் பிரதேச சபைகள் நேரடியாக நடத்தி வருகின்ற சுற்றுலாத்துறை நிலையங்களிலும் பாரிய வருமான வீழ்ச்சி வெகுவாக ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சுற்றுலாத்துறையினை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய சிறு வியாபார முயற்சிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் இவ்வாறான தொழில் முயற்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான நாடளாவிய கொள்கை ஏற்படுத்தப்படுவது அவசியம் எனவும் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -