சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ், ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் போன்ற பாரதூரமான காரணங்களுக்காக மாத்திரமே மதம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பின்பற்றல்கள் மீதான தடைகளை கொண்டு வரலாம்.
அந்த வகையில் அவசர கால சட்டத்தின் கீழ் இலங்கையில் கொண்டு வரப்பட்ட முஸ்லிம் பெண்களின் முகத் திரை ( burqa/ niqab) மீதான தடையை இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொண்டனர். ஆனால் அந்தத் தடை முகத் திரைக்கு மாத்திரமே தவிர “ஹிஜாப்” ( தலையை மறைத்தல் ) யிற்கு அல்ல.
ஆகவே, ஹிஜாபை கழட்டும் படி யாரேனும் வற்புறுத்தினால், அது மனித உரிமைகள் மீறலாக கொள்ளப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைக்கு உற்படுத்தவும் முடியும்.
ஹிஜாப்பை கழட்டும் படி வற்புறுத்தியவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் பல, சர்வதேச ரீதியாக வெற்றி பெற்று உள்ளமையை இங்கு குறிப்பிட வேண்டும்.
ஹிஜாப் விடயத்தினால் பாதிக்கப்படும் முஸ்லிம் பெண்கள், பாடசாலை இடம் மாற்றம் போன்ற தற்காலிக தீர்வுகளை தேர்ந்தெடுக்காமல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றம் போன்றவற்றிற்கு நீதி கேட்டு மனுத் தாக்கல் செய்து, தம் அடிப்படை உரிமையில் யாரும் இனி வரும் காலங்களில் தலையிடாதபடி நிரந்தர தீர்வொன்றை நிலை நாட்ட முன் வர வேண்டும்.
அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் முன் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம், இன்ஷா அல்லாஹ்.
Maryam Naleemudeen
Deen & Associates
Solicitor ( Australia)
Attorney at Law ( Sri Lanka)
+ 61 444 517 460
admin@deenassociates.com.au